மன்னர் சார்லசின் அவுஸ்திரேலியா பயணம்: ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து
பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் அவுஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள்.
இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது.
மன்னர் சார்லசின் ரகசிய மகன்
பிரித்தானியாவில் பிறந்து ஒரு அவுஸ்திரேலிய தம்பதியருக்கு தத்துக்கொடுக்கப்பட்டவர் Simon Dorante-Day (57).
தான் பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கும் அவரது ரகசிய காதலியாக இருந்த கமீலாவுக்கும் பிறந்த குழந்தை என்றும், எட்டு மாதங்கள் தன்னை மறைத்துவைத்திருந்த கமீலா பின்னர் தன்னை தத்துக் கொடுத்துவிட்டதாகவும் சைமன் கூறிவருகிறார்.
மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது மரணப்படுக்கையில் இந்த ரகசியத்தைத் தன்னிடம் கூறியதாக சைமன் தெரிவித்துள்ளார்.
ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து
மன்னர் சார்லசின் அவுஸ்திரேலிய பயணம் குறித்த அறிவுப்பு வெளியானதைத் தொடர்ந்து, அவர்கள் சிட்னிக்கு வரும்போது அவர்களை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சைமன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகம் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், மன்னர் நான் வாழும் இடத்துக்கு வரும்போது நானே நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார் சைமன்.
ஏற்கனவே, தான் மன்னர் சார்லஸ் கமீலா தம்பதியரின் மகன் என்பதை நிரூபிக்க DNA சோதனை நடத்தவேண்டும் என சைமன் கோரியுள்ள நிலையில், அவர் அவர்களை நீதிமன்றத்துக்கு இழுத்து, தான் அவர்களுடைய பிள்ளை என்பதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனை செய்ய வற்புறுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
ஆகவே, சைமனால் மன்னருக்கு ஏதாவது பாதுகாப்பு பிரச்சினை ஏற்படலாம் என்பதால், சைமன் அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |