மன்னர் சார்லஸின் பாதுகாப்பு குறித்த அச்சம்! கிறிஸ்துமஸ் தினத்திற்காக அவசர மறுஆய்வு
கிறிஸ்துமஸ் தினத்தன்று கூடுதலான எதிர்ப்புகள் இருக்கக்கூடும் என்ற அச்சத்தினால், மன்னர் சார்லஸின் பாதுகாப்பு குறித்த அவசர மறுஆய்வு நடந்து வருகிறது.
பாதுகாப்பு அச்சம்
வரும் 25ஆம் திகதி சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் உள்ள செயின்ட் மேரி மாக்டலீன் தேவாலயத்தில், விண்ட்சர் குடும்பம் காலை சேவையில் இருந்து திரும்பிச் செல்லும்போது நலம் விரும்பிகளை வரவேற்கும்.
ஆனால், மன்னர் சார்லஸ் முட்டை வீசும் நபர்களால் இரு முறை குறிவைக்கப்பட்ட பின்னர் இம்முறை மீண்டும் எதிர்ப்பாளர்களை எதிர்கொள்ளக்கூடும் என்று அரச பாதுகாப்புத் தலைவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
@PA
இது முட்டைகளை வைத்திருக்கும் நபர்களைப் பற்றியது மட்டுமல்ல, இது மிகவும் மோசமாக இருக்கும் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவசர மறுஆய்வு
இதன் காரணமாக அரச குடும்பம் பொதுமக்களின் முன்பு தோன்றுவதற்க்கு முன்பாக, மன்னர் சார்லஸின் பாதுகாப்பு குறித்த அவசர மறுஆய்வு நடைபெற்றது.
@Getty Images
இதுகுறித்து மேலும் பேசிய காவல்துறை அதிகாரிகள், 'சரியான கொள்கைகள் மற்றும் வெளியேற்றும் நடைமுறைகள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த முழு அளவிலான மதிப்பாய்வு உள்ளது' என தெரிவித்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் லூட்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, பொதுவான தாக்குதலுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்.