இளவரசர் ஹரி, மேகன் தொடர்பில் மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு
Harry, Meghan will be treated as private citizens, King Charles says: ஹரியும் மேகனும் சாதாரண குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரியும் அவரது மனைவி மேகனும், ஆறு ஆண்டுகளுக்கு முன் கோபித்துக்கொண்டு ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார்கள்.
Sandringham ஒப்பந்தம்
ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு, அவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அந்த விடயம், Sandringham ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது.

அதாவது, இனி ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தவோ, ராஜ குடும்ப பொறுப்புகளை மேற்கொள்ளவோ முடியாது.
அவர்கள், ‘His/Her Royal Highness’ என்னும் பட்டங்களை பயன்படுத்தக்கூடாது. தங்கள் வருவாய்க்கான விடயங்களை, தாங்களே கவனித்துக்கொள்ளவேண்டும்.
அத்துடன், அவர்கள் ஏதேனும் தொண்டு நிறுவனப் பணிகளில் ஈடுபட்டால், அது தனிப்பட்ட முறையிலானதாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய, அதற்கும் ராஜ குடும்பத்துக்கும் சம்பந்தம் கிடையாது.
இந்த நிபந்தனைகளின்பேரிலேயே ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியதுடன், பிரித்தானியாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவிலும் குடியேறினார்கள்.
மீண்டும் பிரித்தானியா திரும்பிய தம்பதியர்
இந்நிலையில், ஹரியும் மேகனும் தங்கள் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார்கள். அவர்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஹரிக்கும் மேகனுக்கும் மீண்டும் ராஜ குடும்ப பொறுப்புகள் வழங்கப்படுமா என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், ஹரியும் மேகனும் சாதாரண குடிமக்களாகவே கருதப்படுவார்கள், அவர்களுக்கு மீண்டும் ராஜ குடும்ப பொறுப்புகள் வழங்கப்படாது என்பதை மன்னர் சார்லஸ் உறுதி செய்துள்ளார்.
ஹரி, மேகன் தம்பதியருக்கும், அரசுத் துறைகளுக்கும், ராணுவ அதிகாரிகள் மற்றும் மன்னரின் பிரதிநிதிகளுக்கும் மன்னர் சார்லஸ் அனுப்பிய கடிதம் ஒன்றில் இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதாவது, ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு, அவர்களுக்கு Sandringham ஒப்பந்தத்தின் கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் நீடிக்கின்றன என்பதை மன்னர் சார்லஸ் தனது கடிதத்தில் உறுதி செய்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |