மன்னர் சார்லஸுக்கு பீதியை கிளப்பும் ஹரியின் நினைவு புத்தகம்! என்றைக்கும் புதைத்து வைக்க நினைக்கும் ரகசியங்கள்
ஹரியின் புத்தகம் அரச குடும்பத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
ஹரி எதைச் சொன்னாலும் இப்போது தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மன்னர் சார்லஸ் அச்சம்.
கடந்த மாதம் ராணி எலிசபெத்தின் மரணத்திற்குப் பிறகு அரியணை எரிய மன்னர் மூன்றாம் சார்லஸ், தன்னைப்பற்றிய 'சில ரகசியங்களை' என்றென்றும் புதைத்து வைக்க விரும்புகிறார்.
ஆனால், இளவரசர் ஹரியின் நினைவுக் குறிப்பு புத்தகம் அவற்றை வெட்டவெளிச்சமாக்கிவிடும் என மன்னர் அஞ்சுவதாக கூறப்படுகிறது.
OK Magazine அறிக்கையின்படி, பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது இளைய மகன் இளவரசர் ஹரியின் வரவிருக்கும் நினைவுக் குறிப்பு புத்தகம் குறித்து பீதியடைந்துள்ளார். தன்னைப்பற்றி ரகசியமாக இருக்கும் சில கதைகள் பகிரங்கப்படுத்தபடலாம் என அஞ்சுவதாக கூறப்படுகிறது.
அரச குடும்பத்தன் இருண்ட இரகசியங்கள் நிறைந்த ஒரு அலமாரியின் திறவுகோலை ஹரி வைத்திருக்கிறார் என்பதை மன்னர் சார்லஸ் அறிவார். அவை அம்பலப்படுத்தப்பட்டால் சார்லஸ் ஒரு மோசமான தந்தை என்று அழைப்பதை விட மிகவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
ஹரி எதைக் கொட்டினாலும் இப்போது தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அவர் அஞ்சுகிறார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், ராயல் எழுத்தாளர் கேட்டி நிக்கோல், ஹரியின் புத்தகம் அரச குடும்பத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
"இளவரசர் ஹரியின் வரவிருக்கும் சுயசரிதை நிச்சயமாக அரச குடும்பத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மற்றும் மிகப்பெரிய கவலையாக இருக்கும். இது அரச வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூத்த அரச ஆதாரங்கள் மற்றும் அரண்மனை உதவியாளர்களிடையே நிறைய கவலைகள் உள்ளன, ஏனெனில், இந்த புத்தகத்தின் மூலம் அவர்களுக்கு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியவில்லை." என்று கூறியுள்ளார்.