4 தசாப்தங்களுக்கு முன்பு டயானாவுடன்…அவுஸ்திரேலியாவில் வரலாற்று பைபிளில் கையெழுத்திட்ட மன்னர் சார்லஸ்
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மன்னர் மூன்றாம் சார்லஸ் அங்குள்ள வரலாற்று பைபிளில் கையெழுத்திட்டார்.
மன்னர் சார்லஸ் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம்
பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.//// புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு மன்னர் சார்லஸ் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைந்துள்ளது.
ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு தனது சுற்றுப்பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மன்னர் சார்லஸ் வடக்கு சிட்னியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு சென்றார்.
பைபிளில் கையொப்பமிட்ட மன்னர் சார்லஸ்
தேவாலயத்திற்கு வந்த மன்னர் சார்லஸ், முதல் கடல் பயணத்தின் போது கொண்டு வரப்பட்ட வரலாற்று பைபிளில் மன்னர் சார்லஸ் ராணி கமிலாவுடன் இணைந்து கையெழுத்திட்டார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மன்னர் சார்லஸ் இந்த பைபிளில் கையெழுத்திடுவது முதல் முறையல்ல, 1983ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது சார்லஸ் இளவரசி டயானாவுடன் கையெழுத்திட்டுள்ளார்.
மன்னர் சார்லஸ், ராணி கமீலா, இளவரசி டயானா ஆகியோரை தவிர இளவரசர் ஆண்ட்ரூ, சாரா பெர்குசன், இளவரசர் வில்லியம் மற்றும் வேல்ஸ் இளவரசி ஆகிய பிறகு அரச குடும்ப உறுப்பினர்களும் பைபிளில் கையெழுத்திட்டுள்ளனர்.
முதல் நாள் சுற்றுப்பயணத்தின் போது அரசியல் பிரதிநிதிகளுடன் உரையாடிய மன்னர் சார்லஸ், அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிய வந்ததை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தும் போது “காலத்தின் மணல்” பற்றி கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |