ராணி எலிசபெத்தின் ஆர்வம் அவருக்கு இல்லை., பந்தய குதிரைகளை பெருந்தொகைக்கு விற்ற மன்னர் சார்லஸ்!
ராணி எலிசபெத்தின் மரணத்திற்கு பின் அவரிடமிருந்த 37 குதிரைகள் மன்னர் மூன்றார் சார்லஸுக்கு வந்தது.
ஓவ்வொரு குதிரையும் 75,000 பவுண்டுகளுக்கு மேல் விற்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் 14 குதிரைகளை விற்ற மன்னர் மூன்றாம் சார்லஸ், அதன்மூலம் 1 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
செப்டம்பர் 8 அன்று ராணி இரண்டாம் எலிசபெத் இறந்தபோது அவரிடமிருந்து 37 குதிரைகளை புதிய மன்னர் மூன்றார் சார்லஸ் பெற்றார். அவை அனைத்தும் பந்தய குதிரைகள் ஆகும்.
Henry Dallal/Getty Images
ஆனால், மன்னர் சார்லஸுக்கு குதிரை பந்தயத்தில் ஆர்வம் இல்லை என்பதால் அவற்றில் சிலவற்றை விற்க முடிவு செய்தார்.
அவற்றில் 14 குதிரைகளை விற்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், அதிலிருந்து மொத்தம் 1,075,500 பவுண்டுகளை மன்னர் சார்லஸ் சம்பாதித்துள்ளார், சராசரியாக மூன்று நாட்கள் நடந்த விற்பனையில், ஓவ்வொரு குதிரையும் 75,000 பவுண்டுகளுக்கு மேல் விற்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Getty Images
இன்னும் மூன்று ஆண்டுகளில் The Royal Studs குதிரைப் பண்ணை ஒரு அருங்காட்சியகமாக மாறும் என்று தெரிவித்துள்ள அரச நிபுணர் ஒருவர், "இது உண்மையான அவமானமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
அரச குடும்பத்திற்கும் குதிரைப் பந்தயத் தொழிலுக்கும் இடையேயான தொடர்பு தொடரும். ஆனால் அரச அஸ்காட் ரேஸ்கோர்ஸின் மரபுகள் மற்றும் தொடர்புகளைத் தொடர வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் விருப்பம், ஆனால் ராணி இரண்டாம் எலிசபெத்தின் அதே அளவில் இருக்குமா என்றால் கிடையாது, ஏனெனில் அவருக்கு அதின் பேரார்வம் இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
PA
PA