இளவரசர் ஹரி- மேகன் தம்பதியை மீண்டும் கைவிட்ட மன்னர் சார்லஸ்: அரண்மனை நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு
சார்லஸ் தலைமையில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய விருந்துக்கு ஹரி- மேகன் தம்பதிக்கு அழைப்பு
மேகன் மற்றும் இளவரசர் ஹரி தம்பதி குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என தகவல்
ராணியாரின் இறுதிச்சடங்குகளுக்கு முன்னர் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் தலைமையில் முன்னெடுக்கப்படும் விருந்துக்கு இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் தலைமையில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய விருந்துக்கு ஹரி- மேகன் தம்பதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவே இந்த வாரம் தொடக்கத்தில் கூறப்பட்டது.
@PA
ராணியாரின் இறுதிச்சடங்குகளுக்கு முன்னர் ஒன்று கூடும் உலகத் தலைவர்களுக்கு மன்னர் சார்லஸ் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். நவீன வரலாற்றில் உலகத் தலைவர்களின் மிகப்பெரிய கூடுகையாக இந்த நிகழ்வு இருக்கும் என்றே கூறப்படுகிறது.
ஆனால், அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கையில், செயல்படும் ராஜகுடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மேகன் மற்றும் இளவரசர் ஹரி தம்பதி குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்றே அவர்களது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
@AP
எதிர்வரும் ஞாயிறன்று முன்னெடுக்கப்படும் பிரமாண்ட விருந்தில் 500கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையில் இருந்தே தலைவர்கள் லண்டன் வரத் தொடங்குவார்கள் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, ராஜகுடும்ப உறுப்பினர்களால் ராணியாருக்கு சிறப்பு மரியாதை செலுத்தும் வேளையில் இளவரசர் ஹரி இராணுவ உடை உடுத்துவாரா என்ற கேள்வி எழுந்தது.
முதலில் மறுக்கப்பட்டு, பின்னர் மன்னர் தலையீட்டால் இளவரசர் ஹரிக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதுபோன்று, தற்போது இந்த விருந்துக்கும் மன்னர் தலையீடு இருக்குமா அல்லது, ஹரி ஒதுக்கப்படுவாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.