வான்கூவர் தாக்குதல்: மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
கனடாவின் வான்கூவரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலால், சொல்லாணாத் துயரத்தில் ஆந்துள்ளதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
வான்கூவர் தாக்குதல்...
சனிக்கிழமை மாலை, கனடாவின் வான்கூவரில் நடைபெற்ற Lapu Lapu Day Block Party என்னும் திருவிழாவின்போது, தெருவில் கூட்டமாக நின்ற மக்கள் மீது நபர் ஒருவர் காரைக் கொண்டு மோதினார்.
இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். தாக்குதல் நிகழ்த்திய Kai-Ji Adam Lo (30) என்னும் நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
The King’s message following this weekend’s tragic events at the Lapu Lapu festival in Vancouver. pic.twitter.com/Q0FBAC3APe
— The Royal Family (@RoyalFamily) April 27, 2025
இந்நிலையில், கனடாவுக்கும் மன்னரான சார்லஸ், இந்த துயர சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வான்கூவரில் நிகழ்ந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அறிந்த நானும் எனது மனைவியும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம்.
இத்தகைய ஒரு துயர சம்பவத்தால் உயிரிழந்த அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான பிரார்த்தனைகள் உரித்தாகட்டும்.
இந்த சம்பவம் கனடாவில் பலருக்கும் மிகவும் வேதனையை உருவாக்கியுள்ள நேரத்தில், எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் மன்னர் சார்லஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |