புற்றுநோய் சிகிச்சையை நிறுத்தும் மன்னர் சார்லஸ்: காரணம் இதுதான்
பிரித்தானிய மன்னர் சார்லஸ், புற்றுநோய் கண்டறியப்பட்ட நிலையிலும், பரபரப்பாக தனது கடமைகளை ஆற்றிவருகிறார்.
இதற்கிடையில், தனது புற்றுநோய் சிகிச்சையையே இடைநிறுத்த முடிவு செய்துள்ளார் மன்னர்!
புற்றுநோய் சிகிச்சையை நிறுத்தும் மன்னர் சார்லஸ்
பிரித்தானிய மன்னர் சார்லஸ், இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 18ஆம் திகதி முதல், 11 நாட்களுக்கு தனது புற்றுநோய் சிகிச்சையை இடைநிறுத்த உள்ளார்.
அவர் தனது சிகிச்சையை 11 நாட்களுக்கு நிறுத்த மருத்துவர்கள் அனுமதியளித்துள்ளனர்.
பரபரப்பாக கடமையாற்றிவரும் மன்னர், அரசு முறைப்பயணமாக அவுஸ்திரேலியாவுக்கும் சமோவா தீவுகளுக்கும் செல்ல இருக்கிறார்.
சார்லஸ் மன்னரானபின் முதன்முறையாக மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணம், பிரித்தானிய மன்னராக மட்டுமின்றி, காமன்வெல்த் அமைப்பின் தலைவராகவும் அவர் இருப்பதால், வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.
இந்த பயணங்களுக்காக மன்னர் தற்காலிகமாக தனது புற்றுநோய் சிகிச்சையை நிறுத்த உள்ள நிலையில், ராணி கமீலாவும், அவரது உடல் நிலையை கவனித்துக்கொள்வதற்காக, ஒரு மருத்துவக்குழுவும் மன்னருடன் செல்ல இருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |