பக்க விளைவுகளால் கடும் அவதி... மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட சார்லஸ் மன்னர்
புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்ட சார்லஸ் மன்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புற்றுநோய் சிகிச்சை
குறித்த தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. 76 வயதான சார்லஸ் மன்னர் வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் மருத்துவமனையில் இருந்து கிளாரன்ஸ் மாளிகைக்கு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் மருத்துவமனை விஜயம் என்பது அவரது புற்றுநோய் சிகிச்சை தொடர்பாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது. ஆனால், வெள்ளிக்கிழமை உத்தியோகப்பூர்வ சந்திப்புகளுக்கு மன்னர் நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெளியன தகவலின் அடிப்படையில், மருத்துவமனை பயணம் எதிர்பாராதது அல்ல என்றும், அவரது சிகிச்சை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
அசாதாரணமானது அல்ல
புற்றுநோய் சிகிச்சை முன்னெடுக்கப்பட்டு வருவதால் தற்காலிக பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து மன்னருக்கு மருத்துவமனையில் சிறிது கண்காணிப்பு தேவைப்பட்டதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், வெள்ளிக்கிழமை வழக்கம் போல உத்தியோகப்பூர்வ சந்திப்புகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனை மன்னரின் பக்க விளைவுகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், புற்றுநோய் நோயாளிகளுக்கு இது அசாதாரணமானது அல்ல என குறிப்பிட்டுள்ளது.
அவர் அவசர சேவைகளை பயன்படுத்தாமல், காரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அரண்மனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |