தந்தை கைவிட்டபோது கைகொடுத்த மன்னர் சார்லஸ் : நன்றி மறந்த ஹரியின் மனைவி மேகன்
திருமணத்தன்று கரம்பற்றி அழைத்துச் செல்ல சொந்த தந்தை வராதபோது, மேகனை தந்தை போல கைபிடித்து அழைத்துச் சென்று கௌரவம் அளித்தார் மன்னர் சார்லஸ்.
ஆனால், மேகனுக்கு அந்த நன்றி கொஞ்சமும் இல்லை!
திருமணத்துக்கே வராத மேகனின் தந்தை
மேகனுடைய திருமணத்தின்போது, அவரை கைபிடித்து அழைத்துச் சென்று ஹரியிடம் ஒப்படைக்க வேண்டிய அவரது தந்தையான தாமஸ் மார்க்கல், சொந்த மகளுடைய திருமணத்துக்கே வரவில்லை.
மருமகள் அவமானப்படக்கூடாது, கவலைப்படக்கூடாது என்று எண்ணி, தந்தையின் ஸ்தானத்தில் நின்று, மேகனை கைபிடித்து அழைத்துச் சென்றார் ஹரியின் தந்தை சார்லஸ்.
Credit: Getty
நன்றி மறந்த மேகன்
ஆனால், அந்த நன்றியெல்லாம் கொஞ்சம் கூட மேகனுக்கு இருப்பது போல் தெரியவில்லை. திருமணமாகி வந்ததுமே தன் பழைய வாழ்க்கையை எல்லாம் மறந்துவிட்டு, அராஜகம் செய்ய ஆரம்பித்து, ஹரியை குடும்பத்திலிருந்து பிரித்து, முதலில் வீட்டை விட்டும், பிறகு நாட்டை விட்டும் வெளியேற்றினார் மேகன்.
Credit: Alexi Lubomirski
அத்துடன் நிற்கவில்லை அவர். உலகமே பார்க்க, கணவனின் மொத்தக் குடும்பத்தையும் தொலைக்காட்சி பேட்டியில் அவமதித்தார். ஆனாலும், சார்லஸ் வாய் திறக்கவில்லை.
இவ்வளவும் நடந்தும், தான் மன்னராக முடிசூடும் விழாவிற்கு ஹரியையும் மேகனையும் அழைத்தார் சார்லஸ். முதலில் மன்னருடைய அழைப்புக்கு ஹரி மேகன் தம்பதியர் பதில் சொல்லவேயில்லை.
இப்போது, ஹரி மட்டும் மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். மேகன் விழாவிற்கு வரப்போவதில்லை.
உங்கள் வாழ்வின் முக்கியமான நாளில் மன்னர் சார்லஸ் உங்களுடன் இருந்தார். ஆனால், அவரது முக்கியமான நாளில் பங்கேற்க நீங்கள் வரவில்லையே என்கிறார்கள் பிரித்தானியர்கள்.
Credit: Getty
Credit: Getty Images - Getty
Credit: PA:Press Association
Credit: The Mega Agency