புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது தெரியும்: மௌனம் கலைத்த மன்னர் சார்லஸ்
பிரித்தானிய மன்னர் சார்லஸ் தனது புற்றுநோயைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
75 வயதான மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது அரச குடும்பத்திற்கு சோகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனை மன்னர் சிகிச்சையில் ஈடுபடுவதற்காக சில அவர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
இந்த நிலையில் புற்றுநோய் கண்டறிதலுக்கு பின் முதல் முறையாக மன்னர் சார்லஸ் பொதுக் கருத்தை தெரிவித்துள்ளார்.
Reuters/Toby Melville
தனது நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்து அவர் தனது அறிக்கையில், ''சமீபத்திய நாட்களில் நான் பெற்ற பல ஆதரவு மற்றும் நல்ல வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தெரியும், இதுபோன்ற அன்பான எண்ணங்கள் மிகப்பெரிய ஆறுதல் மற்றும் ஊக்கம் என்று'' என தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரித்தானியா மற்றும் பிற இடங்களில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் அமைப்புகளின் மீது ஒரு ஒளியைப் பிரகாசிக்க, அவரது நோயறிதல் எவ்வாறு உதவியது என்பதைக் கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
PA Media
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |