சவுத்போர்ட் கத்திக்குத்து விவகாரம்: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் பிரித்தானிய மன்னர்
சவுத்போர்ட் கத்திக்குத்து தாக்குதலில் உயிர் தப்பிய சில சிறுவர்களை பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுத்போர்ட் விவகாரம்
பிரித்தானியாவின் Southport பகுதியில் சிறுவர்களுக்கான கோடைகால முகாமில் Axel Rudakubana என்ற 17 வயது சிறுவன் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்ததில் இருந்து நாடு முழுவதும் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சில வாரங்களாக பிரித்தானியா முழுவதும் கலவரங்கள் வெடித்தன, இதனை கட்டுப்படுத்த பிரித்தானியா அரசு மற்றும் அவசர கால படையினர் மிகவும் பாடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பிரித்தானிய மன்னர் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு
இந்நிலையில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் சவுத்போர்ட் கத்திக்குத்து தாக்குதலில் உயிர் தப்பிய சில குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களது சமூகத்திற்கான ஆதரவை தெரிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 29ம் திகதி ஹார்ட் ஸ்பேஸ் சமூக மையத்தில் நடைபெற்ற தாக்குதலில் நேரடியாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தனிப்பட்ட சந்திப்பில் பிரித்தானிய மன்னர் சார்லஸ் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சவுத்போர்டு நகர அரங்கில் நடைபெறும் சந்திப்பில், மற்ற பிற சமூகத்தினரையும் சந்தித்து தாக்குதல் குறித்தும், வன்முறை குறித்தும் உரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவசர சேவைகளுக்கு பிரித்தானிய மன்னர் தனது நன்றிகளையும் தெரிவித்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |