சர்ச்சையில் சிக்கியுள்ள பிரித்தானிய இளவரசர்... தண்டிக்குமாறு மன்னருக்கு வலியுறுத்தல்
சர்ச்சையில் சிக்கியுள்ள இளவரசர் ஆண்ட்ரூவை தண்டிக்குமாறும், அவருடனான உறவுகளை துண்டிக்குமாறும் மன்னர் சார்லசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
சர்ச்சையில் சிக்கியுள்ள இளவரசர்...
பிரித்தானிய இளவரசரும், மன்னர் சார்லசின் தம்பியுமான ஆண்ட்ரூ, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கிய அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் அளித்த விருந்தில் கலந்துகொண்டுள்ளார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீவின் கூட்டாளியும் காதலியுமான கிஸ்லேன் மேக்ஸ்வெல் என்னும் பெண், இந்த பெண்களை பிரபலங்களுக்கு விருந்தாக்க அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
Credit: Getty
இளவரசர் ஆண்ட்ரூ எப்ஸ்டீன் மாளிகையில் விருந்தில் கலந்துகொண்டபோது, இந்த கிஸ்லேன், Jane Doe 3 என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விர்ஜினியா என்னும் (Virginia Giuffre) இளம்பெண்ணிடம், இளவரசர் ஆண்ட்ரூவுடன் பாலுறவு கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஆண்ட்ரூ என்னவெல்லாம் ஆசைப்படுகிறாரோ, அதையெல்லாம் அவருக்கு செய்யவேண்டும் என எப்ஸ்டீன் விர்ஜினியாவுக்கு அறிவுறுத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
Credit: PA
ஆக, விர்ஜினியாவுடன் மூன்று இடங்களில் வைத்து ஆண்ட்ரூ பாலுறவு கொண்டதாக, நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அப்போது விர்ஜினியாவுக்கு வயது 17 மட்டுமே!
மேலும், அதே இடத்தில் வைத்து, ஆண்ட்ரூ, 20 வயதான Johanna Sjoberg என்னும் இளம்பெண்ணின் உடலை தவறாகத் தொட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
Credit: Splash News
தண்டிக்குமாறு மன்னருக்கு வலியுறுத்தல்
ஏற்கனவே விர்ஜினியா பிரச்சினை வெளியே வந்து ராஜ குடும்பம் அவமானத்தை சந்தித்த நிலையில், பெரும் தொகை ஒன்றைக் கொடுத்து விர்ஜினியாவின் வாயை மூடி விடயத்தை அமுக்கி விட்டார் ஆண்ட்ரூ.
Credit: Jae Donnelly
தான் நிரபராதி என்றே கூறிவந்த ஆண்ட்ரூ, அதற்குப் பின்பும் அப்பாவி போல, ராஜ குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சமீபத்தில் கூட, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ராஜ குடும்பத்துடன் இணைந்து தேவாலயத்துக்கு அவர் செல்லும் காட்சிகள் வெளியாகின.
ஆனால், தற்போது விர்ஜினியா, கிஸ்லேன் மீது தொடுத்த வழக்கு தொடர்பான 1,000 பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள், நீதிபதி Loretta Preskaவின் அனுமதியின் பேரில் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றில், இளவரசர் ஆண்ட்ரூவின் பெயர் 69 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, ஆண்ட்ரூவைத் தண்டிக்கவேண்டும் என்றும், அவருடனான உறவுகளைத் துண்டித்துக்கொள்ளவேண்டும் என்றும் ராஜ குடும்ப நிபுணர்கள் மன்னர் சார்லசை வலியுறுத்தியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |