24 மணிநேரத்தில் இருமுறை 112 மைல் ஹெலிகொப்டரில் பயணித்த மன்னர் சார்லஸ்! வெளியான காரணம்
பிரித்தானிய நகரம் லண்டனில் புதிய ஆப்பிரிக்க மையத்தைத் திறந்து வைக்க மன்னர் சார்லஸ் ஹெலிகொப்டர் பயணம் மேற்கொண்டார்.
ஆப்பிரிக்க மையம்
கடந்த 26ஆம் திகதி அன்று, சான்ட்ரிங்ஹாம் மற்றும் லண்டன் இடையே காலை 11.15 மணி முதல் மதியம் 12.50 மணி வரை விமானம் இல்லாத பகுதிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், தென் ஆப்பிரிக்க மையத்தை திறந்து வைக்க மன்னர் சார்லஸ் சவுத்வார்க்கிற்கு பயணிக்க வேண்டியிருந்தது. எனினும், ராயல் ஹெலிகொப்டர் மூலம் அங்கு செல்ல மன்னருக்கு போதுமான கால அவகாசம் இருந்தது.
எனவே, மறுநாள் காலை 11 மணி முதல் 12.40 மணி வரை, சான்ட்ரிங்ஹாமிற்கு அவர் 45 நிமிடத்தில் திரும்பும் பயணத்திற்கு மற்றொரு NOTAM வழங்கப்பட்டது.
ஹெலிகொப்டர் பயணம்
அதனைத் தொடர்ந்து ஹெலிகொப்டரை பயன்படுத்தி மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் ஹெலிகொப்டர் மூலம் பயணித்த மன்னர் சார்லஸுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர் சிரித்தபடி இசைக்கலைஞர்களுடன் பேசினார். பின்னர் ஆப்பிரிக்காவில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்த விவாதத்தில் இணைந்து கொண்டார்.
அப்போது Lord Boateng, Nigerian High Commissioner Sarafa Tunji Isola உட்பட ஆப்பிரிக்க சமூகத்தின் முன்னணி நபர்களின் குழுவிடம் தனிப்பட்ட முறையில் பல பிரச்சனைகள் குறித்து சார்லஸ் பேசினார்.
இதற்காக மன்னர் சார்லஸ் 24 மணிநேரத்தில், இரண்டு முறை 112 மைல் பயணங்களை ஹெலிகொப்டரில் மேற்கொண்டார்.