மன்னர் சார்லஸ் இவை இல்லாமல் எங்கும் பயணிக்கமாட்டார்! பலரும் அறிந்திராத சுவாரசிய தகவல்
மன்னர் சார்லஸ் எங்கு சென்றாலும் தனது சொந்த கழிப்பறை இருக்கையுடன் தான் செல்வார்.
எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஆண்டர்சன் The King: The Life of Charles III புத்தகத்தை எழுதியவர்.
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் பயணப் பழக்கத்தை சமீபத்தில் எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஆண்டர்சன் வெளிப்படுத்தினார்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் இதுவரை கிரேட் பிரிட்டன் கண்டிராத விசித்திரமான மன்னர்களில் ஒருவராக இருப்பார் என்று அவர் கூறுகிறார்.
மன்னர் சார்சல் இன்னும் தனது குழந்தை பருவ டெடி பியர் பொம்மையுடன் தான் பயணம் செய்வதாக அவர் கூறினார்.
அவர் மிகச் சிறிய குழந்தையாக இருந்தபோது அதை வைத்திருந்ததாகவும், அந்தக் கரடி பொம்மையை தொடுவதற்கு மன்னர் சார்லசால் அனுமதிக்கப்பட்ட ஒரே ஒரு நபர் என்றால், அது அவரது குழந்தை பருவ nanny மாபெல் ஆண்டர்சன் மட்டும் தான், அவர் சார்லஸுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் என்று எழுத்தாளர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, மன்னர் சார்லஸ் 'தனிப்பயனாக்கப்பட்ட கழிப்பறை இருக்கை' மற்றும் காகிதத்துடன் தான் பயணம் செய்கிறார் என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், மன்னர் பிறர் வீடுகளில் விருந்துகளுக்குச் செல்லும் போது, அவர் அடிக்கடி தனது சொந்த சமையல்காரரை அழைத்து வருவார் என்று அரண்மனையில் வேலை செய்பவர்கள், அவருக்காக வேலை செய்தவர்கள் கூறியதாகவும், அவர் சாப்பிடும் உணவை அவர்கள் தயார் செய்து தனியாக மேசையில் வைப்பார்கள் என்று அவர் கூறினார்.
அதேபோல், அவர்கள் எங்கு சென்றாலும் மன்னருக்கு ஐஸ் க்யூப் தட்டுகளை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள், ஏனெனில் square cubes ஐஸ் எழுப்பும் ஒலியை அவர்கள் விரும்பவில்லை என்று கூறினார்.