கலவரங்களால் தடைபட்ட மன்னர் சார்லசின் பிரான்ஸ் பயணம்: சமீபத்திய அறிவிப்பு
மன்னராகப் பொறுப்பேற்றதும், பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் அரசு முறைப்பயணமாக செல்வதாக திட்டமிட்டிருந்தார் சார்லஸ். ஆனால், அந்த திட்டம் நிறைவேறவில்லை.
முதல் அரசு முறைப் பயணம்
மகாராணியாரின் மறைவுக்குப்பின் பிரித்தானிய மன்னராக பொறுப்பேற்ற சார்லஸ், முதல் அரசு முறைப்பயணமாக பிரான்சுக்கும், பிறகு ஜேர்மனிக்கும் செல்வதென திட்டமிடப்பட்டிருந்தது.
கடந்த மார்ச் மாதம் இந்த அரசு முறைப்பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பிரான்சில் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் எடுத்த முடிவால், பிரான்சில் பயங்கர போராட்டங்கள் வெடித்தன.
அதைத் தொடர்ந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போதைய தகவல்
இந்நிலையில், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம், 20ஆம் திகதிக்கும் 22ஆம் திகதிக்கும் நடுவில், மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் பிரான்ஸ் செல்ல இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |