பெண் குழந்தைக்கு ஆசைப்பட்ட மன்னர் சார்லஸ்: வெளியாகியுள்ள புதிய தகவல்
மன்னர் சார்லஸ் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, சார்லஸ் இளவரசராக இருக்கும்போது, அவரது மனைவி டயானா இரண்டாவது முறையாக கர்ப்பமுற, தங்களுக்கு பெண் குழந்தை பிறக்கவேண்டும் என ஆசைப்பட்டாராம் சார்லஸ்.
டயானாவின் தாழ்வு மனப்பான்மை
டயானாவுக்கும் சார்லசுக்கும் கருத்துவேறுபாடுகள் உருவானதைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு பேட்டிகள் அளித்த டயானா, பெரும்பாலும் சார்லஸ் மீது குற்றம் சாட்டும் வகையில், அல்லது அவரைக் குறை சொல்லும் வகையிலேயே பேசியுள்ளதை கவனிக்கலாம்.
இப்போது எப்படி ஒரு சாதாரண நடிகையான மேகனால் ராஜ குடும்பத்தில் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியவில்லையோ, அதேபோல, ஒரு சாதாரண கிண்டர்கார்டன் ஆசிரியையாக இருந்த டயானாவும் ராஜ குடும்பத்துடன் ஒத்துப்போக கஷ்டப்பட்டிருக்கிறார்.
கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட பிறகு, தனது தாழ்வு மனப்பான்மையை அவர் ஒரு கட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் பெரிய இளவரசர், நானோ வெறும் கிண்டர்கார்டன் ஆசிரியை, மொத்தத்தில் அது ஒரு வேடிக்கையான விடயம் என்று கூறியிருக்கிறார் டயானா.
அவமதிக்கும் விதத்தில் பேசியுள்ள டயானா
சார்லஸ், ஒரு பெண் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்ட விடயத்தைக் கூட, குறைகூறும் விதத்தில்தான் கூறியுள்ளார் டயானா.
இரண்டாவது குழந்தை, பெண் குழந்தையாக இருக்கவேண்டும் என சார்லஸ் ஆசைப்பட, அதற்கு பதில் ஹரி பிறக்க, சார்லசுக்கு அது ஏமாற்றமாக இருந்துள்ளது.
ஹரிக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது, தன் மாமியார், அதாவது டயானாவின் தாயிடம், நாங்கள் பெண் குழந்தையை எதிர்பார்த்தோம், ஆனால் ஏமாற்றமாகிவிட்டது என்று கூறினாராம் சார்லஸ்.
அதற்காக சார்லசை கடிந்துகொண்ட டயானாவின் தாய், உங்களுக்கு நல்ல முறையில் ஆரோக்கியமாக ஒரு குழந்தை பிறந்திருக்கிறது, நீங்கள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும் என்று கூறினாராம்.
அதனால் கோபமடைந்த சார்லஸ், அவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாராம். இந்த விடயம் குறித்து பேசும்போது கூட, சார்லசை குறை கூறும் விதத்தில்தான் பேசியுள்ளார் டயானா. அவர் அப்படித்தான், யாராவது அவரிடம் எதிர்த்து பேசினால், அப்புறம் அவர்களிடம் பேசுவதையே நிறுத்திவிடுவார் என்று கூறியுள்ளார் டயானா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |