இளவரசர் ஹரி மேகன் தம்பதிக்கு மன்னர் சார்லஸ் கடும் எச்சரிக்கை
பிரித்தானிய மகாராணியார் மறைவைக் காரணமாக வைத்தாவது இளவரசர் ஹரி ராஜ குடும்பத்துடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பில் மண் விழுந்துள்ளது.
ஹரியும் மேகனும் தொடர்ந்து ராஜ குடும்பத்துக்கு தலைவலியை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இளவரசர் ஹரியும் மேகனும் தொடர்ந்து ராஜ குடும்பத்துக்குத் தலைவலியை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இளவரசர் ஹரி சர்ச்சைக்குரிய சுயசரிதை புத்தம் ஒன்றை வெளியிட இருப்பதுடன், தம்பதியர் நெட்ப்ளிக்ஸ் ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே ஹரி மேகன் தம்பதியர் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி, உலக அரங்கில் ராஜ குடும்பத்துக்கு பெரும் அவமானத்தைக் கொண்டுவந்த நிலையில், தற்போது மீண்டும் எரிச்சலூட்டும் நடவடிக்கைகளில் தம்பதியர் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதனால், மன்னர் சார்லஸ் பலமுறை தம்பதியரை எச்சரித்துள்ளார். அந்த புத்தகம் மற்றும் ஆவணப்படத்தை வெளியிட்டால், மேகனும் ஹரியும், தங்களால் நம்பமுடியாத அளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு ஆளாக்கப்படுவார்கள் என மன்னர் எச்சரித்துள்ளதாகவும், அதனால் தம்பதியர் கவலையடைந்துள்ளதாகவும், ராஜ குடும்ப எழுத்தாளரான Tom Bower என்பவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஹரி மேகன் தம்பதியரின் பிள்ளைகளுக்கு பட்டங்கள் கிடைக்காது என்றும், சொல்லப்போனால், தம்பதியருடைய Duke and Duchess of Sussex என்ற பட்டங்கள் கூட பறிக்கப்படும் என்றும் மன்னர் எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளார் Tom Bower.