கமீலா குறித்து எரிச்சலடைந்த மன்னர் சார்லஸ்: கமெராவில் சிக்கிய காட்சி...
மன்னர் சார்லஸ், தன் மனைவி கமீலா குறித்து விரக்தியடைந்ததைக் காட்டும் ஒரு காட்சி வெளியாகியுள்ளது.
வேல்ஸ் சுற்றுப்பயணம் சென்ற மன்னர், ராணி தம்பதியர்
மன்னர் சார்லசும், ராணி கமீலாவும் வேல்ஸ் நாட்டிலுள்ள Wrexham என்ற இடத்துக்குச் சென்றிருந்தார்கள். அப்போது மக்களை சந்தித்துவிட்டு மன்னர் புறப்பட, கூடவந்த ராணி கமீலாவைக் காணோம்.
அவர் தொடர்ந்து மக்களுடன் அளவளாவிக்கொண்டிருந்தார்.
The King and Queen Consort were in Wrexham to formally confer the cities status, and the King was overheard saying this... pic.twitter.com/YJa2uJLrym
— The Royal Family Channel (@RoyalFamilyITNP) December 9, 2022
சலிப்படைந்த மன்னர்
தான் தொடர்ந்து நடக்க, தன்னுடன் வந்த ராணியைக் காணாததால் சற்றே சலிப்படைந்தார் மன்னர் சார்லஸ். உடனே, பாதுகாவலர்களிடம், அவரை அழைத்துவர முயற்சி செய்யமுடியுமா, நாம் தொடர்ந்து செல்லவேண்டும். நான் காத்திருக்க முயல்கிறேன், ராணியோ இடைவெளி விட்டு வருகிறார் என சற்றே சலிப்புடன் கூறும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
இதற்கு முன் மன்னர் கோபப்பட்டபோதெல்லாம் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இம்முறையோ, மக்கள் இந்த சம்பவத்தை வேடிக்கையாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
image: PA
அவரும் நம்மைப்போல மனிதர்தான் என்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது என்கிறார் இந்தக் காட்சியைக் கண்ட ஒருவர்.
ஒரு பெண்ணோ, என் வீட்டில் டினமும் இதுதான் நடக்கிறது, என் கணவரும் இப்படித்தான் என்கிறார் கேசுவலாக!
image: PA