கமிலாவா ஹரியா..? காதல் மனைவிக்காக மகனை கைவிட தயங்கமாட்டார் மன்னர் சார்லஸ்
குயின் கன்சார்ட் கமிலாவிற்காக ஹரி மேகன் தம்பதியை விலக்கிவிட தயாராக இருக்கலாம்.
அவர் கமிலாவை நேசிக்கிறார். அவரை நம்பமுடியாத அளவிற்கு பாதுகாக்கிறார்
ராணி கமிலாவா அல்லது இளவரசர் ஹரியா என தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டால், மன்னர் மூன்றாம் சார்லஸ் மனையின் பக்கம் தான் நிற்பார் என அரச குடும்பத்திற்கு நெருக்கமான நபர் ஒருவர் கூறியுள்ளார்.
இளவரசர் ஹரி குயின் கன்சார்ட் கமிலாவைப் பற்றி தீங்கு விளைவிக்கும் உரிமைகோரல்களைச் செய்தால், மன்னர் மூன்றாம் சார்லஸ் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலை தனது முடிசூட்டு விழாவிலிருந்து விலக்கிவிடலாம்.
கமிலாவா அல்லது ஹரியா என தேர்வு செய்யவேண்டிய கடினமான நிலையில் இருக்கும் போது மன்னர் தனது மனைவிக்கு பக்கபலமாக இருக்க தயங்க மாட்டார் என்று அரச குடும்பத்திற்கு நெருக்கமான நபர் (insider) தி டெய்லி பீஸ்ட் பத்திரிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த இருபது ஆண்டுகளில் சார்லஸ் செய்த எல்லாமே ஏதோ ஒரு வகையில், கமிலாவை பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளச் செய்வதை சார்ந்தே இருந்தது என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.
அவர் கமிலாவை நேசிக்கிறார். அவரை நம்பமுடியாத அளவிற்கு பாதுகாக்கிறார், அவர் இல்லாமல் மன்னர் சார்லசால் எதுவும் செய்ய முடியாது. இறுதியில் ராணியும் (மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்) அதை ஏற்றுக்கொண்டார் என்று அந்த நபர் கூறினார்.
ஹரி தனது தந்தை சார்லஸை எதிர்ப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். மன்னர் அதை ஓரளவிற்கு எடுத்துக்கொள்வார், ஆனால் இருவரில் யார் வேண்டும் என்று ஹரி அவரை தேர்வு செய்யும்படி கட்டாயப்படுத்தினால், மன்னர் "கமிலாவைத் தேர்ந்தெடுப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்று அந்த நபர் மேலும் கூறினார்.
Tim Rooke/Shutterstock
முடிசூட்டு விழாவிற்கான விருந்தினர் பட்டியல் "tbc" என விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக அரண்மனை கூறுகிறது. இந்த பட்டியலில் ஹரி-மேகன் தம்பதியர் இருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.