இந்த ஒரு காரணத்திற்காக மன்னர் சார்லஸ் பதவி விலக வாய்ப்பில்லை: அடித்துக்கூறும் வரலாற்றாசிரியர்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் பதவி விலக வாய்ப்பிருப்பதாக பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில், வரலாற்றாசிரியர்கள் மறுப்பு தெரிவித்து காரணங்களை பட்டியலிட்டுள்ளனர்.
தமது மகனுக்கு முடிசூட்டுவார்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் பதவி விலகி, வேல்ஸ் இளவரசரான தமது மகனுக்கு முடிசூட்டுவார் என்பது தற்போது வாய்ப்பில்லை என்றே வரலாற்றாசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
@getty
மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை பக்கிங்ஹாம் அரண்மனை திங்கட்கிழமை பிப்ரவரி 5ம் திகதி நாட்டு மக்களுக்கு அறிவித்தது. ஆனால் மன்னருக்கு எந்தவகையான புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இதுவரை அரண்மனை வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து 75 வயதான மன்னர் சார்லஸ் பொதுமக்களை சந்திக்கும் அனைத்து அலுவல்களையும் தள்ளிவைத்துள்ளார். அத்துடன், புற்றுநோய் சிகிச்சையும் தொடங்கப்பட்டுள்ளது.
@afp
இந்த நிலையில் வரலாற்று ஆசிரியரான David Starkey தெரிவிக்கையில், மன்னர் பதவி விலகுவார் என்பதெல்லாம் வெறும் கற்பனை மட்டுமே, அப்படி எளிதில் பதவி விலகவும் முடியாது என்றார்.
மன்னராகும் வாய்ப்பு
மன்னர் அல்லது ராணியாரின் தனிப்பட்ட வாழ்க்கை சிக்கலில் இருந்தால் மட்டுமே பதவி துறக்க முடியும், அல்லாமல் நோய் காரணமாக பதவி விலகுவதில்லை என்று David Starkey விளக்கமளித்துள்ளார்.
மன்னர் காலமானால் மட்டுமே வேல்ஸ் இளவரசருக்கு மன்னராகும் வாய்ப்பு அமையும். ஆனால், Operation Menai Bridge எனப்படும் மன்னர் மரணமடைந்தால் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகளை அவர் முடிசூடிய அன்றே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
@getty
சார்லஸ் மன்னர் தற்போது சிகிச்சையை தொடங்கியதாகவும், அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |