இந்த சூழ்நிலை ஏற்பட்டாலொழிய மன்னர் சார்லஸ் இனி ஹரி மேகனுடன் பேசமாட்டார்...
இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் சர்ச்சைக்குரிய நெட்ப்ளிக்ஸ் தொடரை வெளியிட்டு ராஜ குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவருகிறார்கள்.
மன்னர் இனி ஹரி மேகனுடன் பேசமாட்டார்
இந்நிலையில், இனி மன்னர் சார்லஸ், ஹரி மேகன் தம்பதியருடன் பேசமாட்டார் என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தங்கள் நெட்ப்ளிக்ஸ் தொடரில் ஹரியும் மேகனும் ராஜ குடும்ப உறுப்பினர்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுவரும் நிலையில், அவர்கள் நம்பத் தகுதியற்றவர்கள் என்று கூறியுள்ள ராஜ குடும்ப நிபுணரான Kinsey Schofield, அந்த நெட்ப்ளிக்ஸ்தொடர் குறித்து ராஜ குடும்பத்தினர் எந்த பதிலும் அளிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
Image: POOL/AFP via Getty Images
இந்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலொழிய...
ராஜ குடும்பத்தில் யாருக்காவது உடல் நல பாதிப்பு ஏற்பட்டாலொழிய இனி ராஜ குடும்ப தரப்பிலிருந்து யாரும் ஹரி மேகன் தம்பதியரை தொடர்புகொள்ளப்போவதில்லை என்றும் கூறியுள்ளார் Kinsey Schofield.
ஹரியும் மேகனும் வெளியிட்டுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடரில், இதுவரை வெளியான எபிசோடுகளில் மகாராணியாரை மேகன் கேலி செய்தது முதல், தனது அண்ணன் இளவரசர் வில்லியம் குறித்து ஹரி தெரிவித்துள்ள கருத்துவரை சர்ச்சைக்குரிய பல விடயங்கள் இடம்பெற்றிருப்பதால் ராஜ குடும்பத்தினர் வருத்தமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Image: UK Press via Getty Images
Image: Getty Images for the Invictus Games Foundation