இளவரசி டயானா மரணம் தொடர்பில் சார்லஸ் எழுதிய கடிதம்: யாருக்கு எழுதப்பட்டது?
இளவரசர் டயானாவின் மரணம் தொடர்பில் சார்லஸ் எழுதிய கடிதம் ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. இலங்கை மதிப்பில் 5,79,565 ரூபாய்க்கு அது ஏலத்தில் எடுக்கப்பட்டது.
யாருக்கு எழுதப்பட்டது?
அந்தக் கடிதம், பீற்றர் என அழைக்கப்படும் ஒருவருக்கு எழுதப்பட்டுள்ளது. அவர் டயானாவுக்கு நெருக்கமாக ஒருவராக இருந்திருக்கக்கூடும்.
ஏனென்றால், சார்லஸ் தன் கைப்பட எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், நீங்கள் கடந்து செல்லும் வேதனையும் வருத்தமுமான சூழலை எண்ணி, என் இதயம் இரத்தக்கண்ணீர் வடிக்கிறது.
டயானாவை இழந்ததால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள தாங்க இயலாத வெறுமையையும் இளம் வயதில் ஒருவர் இந்த உலகை விட்டுக் கடந்துபோனதால் ஏற்பட்டுள்ள இனம்புரியாத குழப்பத்தையும் என்னால் உணரமுடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார் சார்லஸ்.
ஆனால், யார் அந்த பீற்றர் என்பது தெரியவில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |