அமெரிக்க காதலிக்காக... அரண்மனையை விட்டு வெளியேறிய எட்வர்ட் மன்னரின் நிலையில் இளவரசர் ஹரி!
அமெரிக்க காதலியான வாலிஸ் சிம்ப்சனை மணக்கும் பொருட்டு, அரண்மனையில் இருந்து வெளியேறினார்.
அரச குடும்பத்துடனான தொடர்பைத் துண்டித்த பிறகு இரு ஆண்களும் சோகத்தை வெளிப்படுத்தி வந்தனர்
அமெரிக்க காதலிக்காக அரண்மனையை விட்டு வெளியேறிய பிரித்தானிய மன்னர் எட்டாவது எட்வர்ட் வெளிப்படுத்திய அதே துயரமான நிலை தற்போது இளவரசர் ஹரியிடம் காணப்படுவதாக கூறுகின்றனர்.
இளவரசர் ஹரியின் மிக நெருங்கிய உறவினரான மன்னர் எட்டாவது எட்வர்ட் முடிசூடிய பின்னர் வெறும் 325 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்துள்ளார். தொடர்ந்து தமது அமெரிக்க காதலியான வாலிஸ் சிம்ப்சனை மணக்கும் பொருட்டு, மொத்தமும் துறந்து அரண்மனையில் இருந்து வெளியேறினார்.
@getty
அவரில் காணப்பட்ட அந்த சோகமான உடல்மொழியே தற்போது இளவரசர் ஹரியிடம் சமீப நாட்களாக காணப்படுவதாக ராஜகுடும்பம் தொடர்பில் பதிவு செய்பவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இளவரசர் ஹரியும் தமது காதல் மனைவியும், ஒருமுறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவருமான மேகன் மெர்க்கலை மணந்த பின்னர், ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார்.
இதுபோலவே, மன்னர் எட்டாவது எட்வர்டும் இருமுறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற வாலிஸ் சிம்ப்சனை மணக்கும் பொருட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார்.
அரச குடும்பத்துடனான தொடர்பைத் துண்டித்த பிறகு இரு ஆண்களும் சோகத்தை வெளிப்படுத்தி வந்தனர் என்றே ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், தாங்கள் முன்னெடுத்த முடிவு தவறானது என இரு ஆண்களும் ஒருபோதும் ஒப்புக்கொனடதில்லை என்றே கூறுகின்றனர்.
Credit: Misan Harriman
1936 ஜனவரி 20ம் திகதி எட்டாவது எட்வர்ட் மன்னராக முடிசூடிக்கொண்டவர், அதே ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி முடி துறந்துள்ளார்.
இதே நிலையில் தான் தற்போது ஹரியும் உள்ளார் எனவும், ஆனால் அவரது எதிர்காலம் தொடர்பில் அவருக்கு புரிதல் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.