நான்தான் பிரான்சின் உண்மையான மன்னர்... இந்தியர் முன்வைக்கும் ஆதாரங்கள்
இந்தியாவின் போபாலில் வாழும் ஒருவர், தான்தான் பிரான்ஸ் அரியணையின் உண்மையான சொந்தக்காரர் என்று கூறியுள்ளார்.
நான்தான் பிரான்சின் உண்மையான மன்னர்...
The Bourbon dynasty என்பது, 1589 முதல் 1789 வரை பிரான்சை ஆண்ட ராஜ வம்சம் ஆகும். தான் அந்த ராஜ வம்சத்தில் வந்தவன் என்கிறார், போபாலில் வாழும் பல்தசார் (Balthazar Napoleon IV de Bourbon, 65) என்பவர்.
Credit: Rex
நான் இந்தியனாகப் பிறந்தேன், ஆனால், உண்மை என்னவென்றால், நான் பிரான்ஸ் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவன் என்கிறார் அவர்.
தான் பிரான்ஸ் ராஜ பரம்பரை வாரிசு என்று கூறும் பல்தசார், அதற்கான சில ஆதாரங்களையும் முன்வைக்கிறார்.
Credit: Heritage Art/Heritage Images
இந்தியா வந்தடைந்த மன்னருடைய உறவினர்
கப்பலில் பயணித்துக்கொண்டிருந்த Jean Philippe de Bourbon என்னும் பிரான்ஸ் ராஜ குடும்ப உறுப்பினர், கடல் கொள்ளையர்களுக்குத் தப்பி, பல கொலை முயற்சிகள், கடத்தல் முயற்சிகளை தாண்டி இந்தியாவின் கோவாவை வந்தடைந்துள்ளார்.
இந்த Jean Philippe de Bourbon, பிரான்ஸ் மன்னர் நான்காம் ஹென்றியின் உறவினர் ஆவார். 16ஆம் நூற்றாண்டில், பேரரசர் அக்பரின் அரசவையில் பணியாற்றியுள்ளார் அவர்.
18ஆம் நூற்றாண்டில், அவரது சந்ததியினர் போபாலுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். இப்போது பல்தசாரும் போபாலில்தான் குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார்.
அவரது மனைவி பெயர் Elisha Pacheco. தம்பதியருக்கு Frederick, Michelle, மற்றும் Adrian என்னும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
Credit: 2007 AFP
முன்வைக்கும் ஆதாரங்கள்
தான் பிரான்ஸ் ராஜ குடும்பமான Bourbon ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன் என உறுதியாக நம்பிக்கொண்டிருந்த பல்தசாரின் நம்பிக்கையை உறுதி செய்வதுபோல, அவரது வாழ்வில் மற்றொரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Credit: 2007 AFP
2006ஆம் ஆண்டு, கிரீஸ் நாட்டு இளவரசரான மைக்கேல், விடுமுறைக்காக இந்தியாவின் போபாலுக்கு வந்துள்ளார். அவர், உறவுமுறையில், Philipஇன் சகோதரர்.
இளவரசர் மைக்கேல் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அவரது அறையின் கதவில், Bourbon Suite என பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார்.
Credit: Rex
அது குறித்து அவர் விசாரிக்க, போபாலில் Bourbon குடும்பம் ஒன்று உள்ளது என ஹொட்டல் ஊழியர்கள் கூற, அது குறித்து ஆராய்ந்த மைக்கேல், தனது ஆராய்ச்சியின் விளைவாக பல்தசார் பிரான்ஸ் ராஜ குடும்ப வாரிசு என்பதை உறுதி செய்துள்ளார்.
Credit: Alamy
ஆனாலும், நான் ஒரு இந்தியன், எனக்கு பிரான்சுக்கு குடிபெயரவோ, பிரான்ஸ் குடியுரிமை பெறவோ விருப்பமில்லை என்கிறார் பல்தசார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |