பொது இடத்தில் மன்னர் சார்லசை தலைகுனியவைத்த நபர்: தொடரும் அவமானம்
மன்னர் சார்லசுடைய தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவால் ராஜ குடும்பத்துக்கு அவமானம் தொடர்கிறது.
நேற்று, இங்கிலாந்தில், மன்னர் சார்லசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் ஒரு கேள்வியை பொது இடம் ஒன்றில் வைத்து கேட்டார் ஒரு நபர்!
இளவரசர் ஆண்ட்ரூவால் தொடரும் அவமானம்
இளவரசர் ஆண்ட்ரூவுக்கு, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் சீரழித்த மோசமான பாலியல் குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஆண்ட்ரூவை ராஜ குடும்பத்திலிருந்து விலக்கிவைத்தார் மகாராணியார்.

Credit: SWNS
ஆனால், அவரால் இன்னமும் ராஜ குடும்பத்துக்கு அவமானம் தொடர்கிறது. தான் வாழும் வீட்டுக்கு பல ஆண்டுகளாக வாடகை கொடுக்காமலே ஆண்ட்ரூ வாழ்ந்துவருவதாகவும் தற்போது தகவல் வெளியாக, பிரித்தானிய மக்கள் கோபமடைந்துள்ளார்கள்.
மன்னர் சார்லசை தலைகுனியவைத்த நபர்
இந்நிலையில், நேற்று இங்கிலாந்திலுள்ள Lichfield தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்தார் மன்னர் சார்லஸ்.
The walk abouts will be tricky from now on, King Charles gets heckled on today’s engagement💁🏾♀️
— SK 💃🏾🕺 (@Rimmesfk) October 27, 2025
“How long have you known about Andrew & Epstein”?
Sounds like a valid question to me 💁🏾♀️ pic.twitter.com/Onfw4Q9VKT
மக்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றுக்கொண்டிருந்த நேரத்தில், கூட்டத்திலிருந்த ஒரு நபர், ஆண்ட்ரூ குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
ஆண்ட்ரூவுக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பது உங்களுக்கு எவ்வளவு காலமாகத் தெரியும், ஆண்ட்ரூவின் குற்றங்களை மறைக்க பொலிசாரைக் கேட்டுக்கொண்டீர்களா, இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியளிக்கப்படுமா என அவர் சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுக்க, மன்னர் சார்லஸ் பதில் கூறமுடியாமல் வாயடைத்து நின்றார்.

Credit: BBC
மன்னரின் நிலைகண்ட பொதுமக்கள் அவருக்கு உதவ முன்வந்தார்கள். ஒரு பெண், கேள்வி கேட்ட நபரைப் பார்த்து ‘வாயை மூடு’ என சத்தமிட, மற்றவர்கள், மன்னர் வாழ்க என்னும் ரீதியில் சத்தமிட, மன்னர் அங்கிருந்து அமைதியாக அகன்று சென்றார்.
மன்னரை நோக்கி கேள்விக்கணைகளைத் தொடுத்த அந்த நபர், மன்னராட்சிக்கு எதிரான அமைப்பான Republic என்னும் அமைப்பைச் சேர்ந்தவர் என கருதப்படுகிறது.
Credit: BBC