பிரித்தானிய மன்னருடைய படுக்கையறையை எட்டிப்பார்க்கும் அரண்மனை ஊழியர்கள்: ஒரு வித்தியாசமான செய்தி
மறைந்த இளவரசி டயானா முதல், இளவரசர் ஹரி, அவரது மனைவி மேகன்வரை, இக்காலத்து ராஜ குடும்பத்தினர், தங்களுக்கு பிரைவஸியே இல்லை என சலித்துக்கொண்டதுண்டு.
தாங்கள் எங்கு சென்றாலும் புகைப்படம் எடுப்பவர்களும், ஊடகவியலாளர்களும் தங்களைப் பின்தொடர்வதால் கோபம் காட்டியவர்களும் உண்டு.
இளவரசி டயானாவின் மரணத்தின் பின்னணியில்கூட, அவரை பாப்பராஸிகள் என்னும் புகைப்படம் எடுப்பவர்கள் துரத்தியதாகவும், அதனால்தான் அவரது கார் விபத்துக்குள்ளானது என்றும் கூட செய்திகள் வெளியானதுண்டு.
Image: Photo by: Sepia Times/Universal Images Group via Getty Images
மன்னரின் படுக்கையறையை எட்டிப்பார்க்கும் ஊழியர்கள்
இளவரசர் ஹரி முதலானவர்கள் தங்களுக்கு பிரைவஸி இல்லை என சலித்துக்கொள்ளும் நிலையில், பிரித்தானியாவை ஆண்ட Tudor என்னும் ராஜ குடும்பத்தினரின் பிரைவஸி குறித்த ஒரு சுவாரஸ்ய செய்தி வெளியாகியுள்ளது.
அந்த ராஜ குடும்பத்தில் எட்டாவது ஹென்றி என்னும் ஒரு மன்னர் இருந்துள்ளார். ஒருமுறை, யாரோ தன்னை கேலியாக பார்த்தார் என்பதற்காக, அவரையும் அவரது முழுக் குடும்பத்தையும் தலையை வெட்டிக்கொன்றவர் இந்த ஹென்றி.
ஆனால், அவர் கழிவறைக்குச் செல்லும்போது, அவருடன் ஒரு ஊழியர் கூடவே இருப்பாராம்.
அதைவிடக் கொடுமை, மன்னர் தன் மனைவியுடன் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளும்போதும், திரைக்குப் பின்னாலிருந்து ஊழியர்கள் அவர்களை கவனித்துக்கொண்டே இருப்பார்களாம்.
Image: Photo by Fine Art Images/Heritage Images/Getty Images
அதாவது, மன்னர் மக்களுடைய சொத்து, அவர் அவர்களுக்கு ஒரு வாரிசை உருவாக்கிக் கொடுத்தாகவேண்டும். ஆகவே, அவர் தன் மனைவியுடன் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதை உறுதிசெய்வதற்காக, ஊழியர்கள் படுக்கையறையைச் சுற்றிலும் நின்று கவனித்துக்கொண்டிருப்பார்களாம்.
ராணி மீது பழி சுமத்திய மன்னர்
துரதிஷ்டவசமாக பின்னாட்களில் மன்னர் ஆண்மையற்றவராகிவிட்டாராம். ஆனால், தன் மனைவியாகிய Anne of Cleve சுத்தமாகவே இல்லை. அவருடன் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ள தன்னால் இயலவில்லை என அவர் மீது பழியைப் போட்டுவிட்டாராம் ஹென்றி.
இப்படியெல்லாம் தனிமையே இல்லாமல் மன்னர்களும் ராணிகளும் வாழ்ந்த நிலையில், நேற்று வரை சினிமாவில் ஆபாசமாக நடித்துவிட்டு, இன்று இளவரசர் ஹரியை மணந்ததும், தனக்கு பிரைவஸியே இல்லை என்று புலம்பும் மேகனை நினைத்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
Image: Photo by Print Collector/Getty Images