மேற்கிந்திய தீவுகளிடம் வீழ்ந்த இலங்கை அணி: ருத்ர தாண்டவமாடிய இருவர்
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மெண்டிஸ்-அசலங்கா அரைசதம்
தம்புள்ளையில் நேற்று நடந்த டி20 போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
அப்போது கைகோர்த்த கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis), சரித் அசலங்கா (Charith Asalanga) இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இருவரும் அரைசதம் விளாச இலங்கை 7 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்கள் குவித்தது. அசலங்கா 35 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸ் 40 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.
ருத்ர தாண்டவமாடிய கிங்-லெவிஸ்
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரண்டன் கிங் (Brandon King) மற்றும் எவின் லெவிஸ் (Evin Lewis) இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர்.
இலங்கையின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய லெவிஸ், 28 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஷாய் ஹோப் (Shai Hope) 7 ஓட்டங்களில் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த கிங் 63 (33) ஓட்டங்கள் விளாசிய நிலையில் கமிந்து மெண்டிஸ் ஓவரில் அவுட் ஆனார்.
Setting the stadium ablaze!🔥
— Windies Cricket (@windiescricket) October 13, 2024
Brandon King brings up his 1️⃣1️⃣th T20I half century!👏🏾#SLvWI | #MenInMaroon pic.twitter.com/bqbdgmfurt
எனினும் ரோவ்மான் பவுல் (13), ரூதர்போர்டு (14) வெற்றியை நிலைநாட்டினர். இலங்கை தரப்பில் பத்திரனா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
Back like he never left!🔥
— Windies Cricket (@windiescricket) October 13, 2024
How about this comeback innings from Evin Lewis!?🙌🏾 #SLvWI | #MenInMaroon pic.twitter.com/hoKF4v5Fez
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |