தன்னுடன் புகைப்படம் எடுக்க தயங்கி நின்றவருக்காக விதியை மீறிய மன்னரின் பாதுகாவலர்: நெகிழவைத்த காட்சி
மன்னரின் பாதுகாவலர்கள் தங்கள் அருகே புகைப்படம் எடுக்க வருபவர்களைப் பார்த்து கத்திய சம்பவங்கள் பல பிரித்தானியாவில் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், மன்னரின் பாதுகாவலர் ஒருவர் செய்த ஒரு செயல் காண்போரை நெகிழவைத்துள்ளது.
டௌன் சிண்ட்ரோம் கொண்ட நபர்
பக்கிங்காம் அரண்மனை வாசலில் நின்ற மன்னருடைய பாதுகாவலரின் அருகே நின்று புகைப்படம் ஒன்றை எடுக்க விரும்பியுள்ளார் டௌன் சிண்ட்ரோம் என்னும் மரபியல் குறைபாடு கொண்ட ஒருவர்.
ஆனால், சமீப காலமாக மன்னரின் பாதுகாவலர்கள் தங்கள் அருகே புகைப்படம் எடுக்க வருபவர்களைப் பார்த்து கத்திய சம்பவங்கள் பல பிரித்தானியாவில் நிகழ்ந்துள்ளதால், அந்த பாதுகாவலருக்கு சற்று தொலைவில் தயங்கி நின்று புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர் அந்த நபரும், அவரை பார்த்துக்கொள்பவரும்.
நெகிழவைத்த மன்னரின் பாதுகாவலர்
புகைப்படம் எடுப்பவர் புகைப்படம் எடுக்கத் தயாரானதும், சட்டென அவர்கள் அருகே நெருங்கி புகைப்படம் எடுப்பதற்கு வசதியாக போஸ் கொடுத்தார் அந்த பாதுகாவலர். உண்மையில் அது விதி மீறலாகும்.
ஆனாலும், அவர் அந்த டௌன் சிண்ட்ரோம் குறைபாடு கொண்டவருக்காக, விதியை மீறி அவர் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள உதவியுள்ளார் அந்த பாதுகாவலர்.
அப்போதும், அந்த டௌன் சிண்ட்ரோம் குறைபாடு கொண்டவர் பயந்து விலக, அவருடன் நின்றவர் அவரை புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க உற்சாகப்படுத்த, புகைப்படம் எடுத்ததும், மீண்டும் தன் இடத்தில் போய் நின்றுகொண்டார் அந்த பாதுகாவலர்.
அவரது செயலால் அந்த டௌன் சிண்ட்ரோம் குறைபாடு கொண்டவரை கவனித்துக்கொள்ளும் அந்த நபர் மிகவும் நெகிழ்ந்துபோயிருக்கிறார். அந்த பாதுகாவலரின் செயல் சில நாட்களுக்கு தன் கண்களில் கண்ணீரை துளிர்க்கச் செய்ததாக கூறுகிறார் அவர்.