மன்னருடைய முடிசூட்டுவிழா புகைப்படத்தில் முன்பின் தெரியாத நபர்கள்: குழப்பத்தில் மக்கள்
மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து மன்னரான சார்லஸ், உழைக்கும் ராஜ குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதென முடிவு செய்தார்.
22 பேர் உழைக்கும் மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களாக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கையை 7 ஆக குறைக்க முடிவு செய்தார் சார்லஸ்.
இந்நிலையில், மன்னருக்கு முடிசூட்டுவிழா நடைபெற்றது. முடிசூட்டுவிழா தொடர்பான அதிகாரப்பூர்வ புகைப்படங்களும் வெளியாகின.
மக்களைக் குழப்பிய புகைப்படம்
உழைக்கும் ராஜ குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இருக்கும் புகைப்படமானால், அதில் 7 பேர் மட்டுமே இருக்கவேண்டும். இல்லை, தனிப்பட்ட குடும்பப் படம் என்றால், அதில் இளவரசர்கள் ஆண்ட்ரூவும் ஹரியும் இருக்கவேண்டும். ஆனால், அப்படியும் இல்லை, இப்படியும் இல்லை.
இந்நிலையில், அதிகம் முகம் தெரியாத சிலர் மன்னருடைய முடிசூட்டுவிழா புகைப்படத்தில் காணப்படுவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள்.
Credit: PA
இளவரசி ஆனுடன் காணப்பட்ட நபர்
இளவரசர்கள் ஆண்ட்ரூவும் ஹரியும் இல்லாத ராஜ குடும்ப புகைப்படத்தில், யாரென்றே தெரியாத ஒரு நபர் நிற்கிறார். அவர் இளவரசி ஆனுக்கு அருகில் நிற்கிறார்.
அவர் யாரென்று விசாரித்தால், அவர் இளவரசி ஆனுடைய இரண்டாவது கணவராம். அவருடைய பெயர் Sir Timothy Laurenceஆம்.
Credit: PA
இளவரசி ஆன் திருமணமாகி தன் முதல் கணவருடன் வாழும்போதே, அவரும் அவரது கணவரான Captain Mark Phillipsம், வெவ்வேறு நபர்களுடன் நெருங்கிப் பழகிவந்ததாக கூறப்படுகிறது. கணவரை விவாகரத்து செய்தபின், Sir Timothyயை திருமணம் செய்துள்ளார் ஆன். இளவரசி ஆன் எங்கு சென்றாலும் அவருடனேயே செல்லும் நபர் என்றே பிரித்தானிய பத்திரிகைகள் இந்த Sir Timothyயை குறிப்பிடுகின்றன.
Credit: PA
ஆக, இந்த Sir Timothy, Gloucester கோமகள் Birgitte, Gloucester கோமகன் Richard, இளவரசி Alexandra என மக்களுக்கு அதிகம் தெரியாத பலர் மன்னருடைய முடிசூட்டுவிழாவின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தில் இடம்பெற்று, இளவரசர்கள் ஆண்ட்ரூவும் ஹரியும் புகைப்படத்தில் இடம்பெறாததால் பிரித்தானிய மக்கள் வியப்புடன் அந்த புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களாம்!
Credit: PA