இளவரசர் ஹரிக்கு மன்னர் அளித்துள்ள இரட்டை ஏமாற்றம்: வில்லியமுக்கு அளிக்கப்பட்ட ஹரியின் பொறுப்பு
இளவரசர் ஹரி பிரித்தானியா வந்துள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது தந்தையுடனான சந்திப்பு இம்முறை நிகழாது என்றொரு ஏமாற்றமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா வந்தடைந்த ஹரி
மன்னர் சார்லசுக்கும் இளவரசி கேட்டுக்கும் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இளவரசர் ஹரி அவர்களை சந்திப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் இளவரசர் வில்லியமும், அவரது மனைவியான இளவரசி கேட்டும், குட்டி இளவரசர் ஆர்ச்சியையும், குட்டி இளவரசி லிலிபெட்டையும் பிரித்தானியாவுக்கு அழைத்துவருமாறு ஹரி மேகன் தம்பதிக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள்.

Credit: LNP
ஆனால், ஹரி தன் மனைவியையோ, பிள்ளைகளையோ அழைத்துவரவில்லை, தனியாகத்தான் வந்திருக்கிறார். அவர் லண்டன் வந்து சேர்ந்ததைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மன்னர் அளித்துள்ள இரட்டை ஏமாற்றம்
எப்படி அவர் தனது தந்தைக்கும், அண்ணன் அண்ணிக்கும் ஏமாற்றமளித்தாரோ, அதேபோல, மன்னர் தரப்பிலும் அவருக்கு ஏமாற்றமே காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, மன்னர் பிசியாக இருப்பதால், அவர் இளவரசர் ஹரியை சந்திக்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

Credit: PA
இன்னொரு விடயம் என்னவென்றால், முன்னர் ஹரி பொறுப்பு வகித்த ஹெலிகொப்டர் படையின் பொறுப்பு ஹரியின் அண்ணனான இளவரசர் வில்லியமுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மன்னர் அறிவித்துள்ளார்.

Credit: Getty
ஆக, ஹரி இரட்டை ஏமாற்றத்தை சந்தித்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். காரணம், ஹரி இன்னமும் பிரித்தானியாவில்தான் இருக்கிறார். ஆகவே, எது வேண்டுமானாலும் நடக்கலாம்!

Credit: Getty

Credit: Getty

Credit: Getty

Credit: Getty
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |