பிரித்தானிய ராஜகுடும்பத்திற்கு சொந்தமான வீடுகளில் இனி ஹரி- மேகன் தம்பதிக்கு இடமில்லை: மன்னர் சார்லஸ் அதிரடி
பிரித்தானியாவில் இளவரசர் ஹரி- மேகன் குடும்பம் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த Frogmore மாளிகையில் இருந்து அவர்களை மன்னர் சார்லஸ் வெளியேற்றியுள்ளதாக அரண்மனை வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.
ஹரி- மேகன் குடும்பம்
குறித்த மாளிகையை தமது சகோதரர் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ஒதுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த முடிவால் ராஜ குடும்பத்துடனான அவர்களின் உறவில் எந்த குறையும் இருக்காது என மன்னர் சார்லஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
@getty
இந்த நிலையில், Frogmore மாளிகையில் இனி தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் உடைமைகளை கலிபோர்னியாவுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை ஹரி - மேகன் தம்பதி முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Frogmore மாளிகையில் இருந்து ஹரி - மேகன் தம்பதி வெளியேற்றப்பட்டுள்ளது, பிரித்தானியாவில் இனி அவர்களின் வருகையை மொத்தமாக குறைக்கும் என அரண்மனை வட்டாரத்தில் கூறுகின்றனர்.
மேலும், முறைகேடுகளில் சிக்கியுள்ள இளவரசர் ஆண்ட்ரூ இனி Frogmore மாளிகையில் குடியேறலாம் என்றே தகவல் கசிந்துள்ளது. ஹரி வெளியிட்டுள்ள நினைக் குறிப்புகளே, மன்னர் சார்லஸை இந்த முடிவுக்கு இட்டுச்சென்றுள்ளது என கூறப்படுகிறது.
மட்டுமின்றி, Frogmore மாளிகையில் குடியேற ஆண்ட்ரூ ஒப்புக்கொள்வாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. காரணம் அவர் விண்ட்சர் மாளிகையில் இருந்து வெளியேற மறுப்பதாகவே கூறுகின்றனர்.
ஹரி- மேகன் தம்பதி அதிகாரமற்றவர்கள்
ஹரி- மேகன் தம்பதியை பொறுத்தமட்டில், அதிகாரமற்றவர்கள், அரண்மனை வெளியேற வேண்டும் என உத்தரவிட்டால், வேறு வழி அவர்களுக்கு இல்லை என்றே சிலர் குறிப்பிடுகின்றனர்.
@getty
ஹரி - மேகன் தமபதியின் திருமணத்திற்கு பின்னர் கடந்த 2018ல் ராணியார் எலிசபெத் Frogmore மாளிகையை இவர்களுக்கு பரிசளித்திருந்தார். ஐந்து படுக்கையறைகள் கொண்ட Frogmore மாளிகையானது சுமார் 2.4 மில்லியன் பவுண்டுகள் செலவீட்டு புதுப்பித்த பின்னரே, ராணியார் ஹரி - மேகன் தம்பதியிடம் ஒப்படைத்தார்.
மேலும், தற்போது Frogmore மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு ஹரி- மேகன் குடும்பம் அழைக்கப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.