அச்சு அசல் ராணி கமிலா போலவே! ரகசியமாக பிறந்த மகன் என கூறும் நபர் வெளியிட்ட புகைப்படங்கள்.. பலரும் ஷாக்
சார்லஸ் - கமிலா தம்பதிக்கு ரகசியமாக பிறந்த மகன் என கூறும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சைமன்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த பலர் ஆச்சரியம்.
சார்லஸ் - கமிலாவிற்கு பிறந்த மகன் என கூறும் சைமன் டொரண்ட் டே சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையவாசிகள் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஏனெனில் அதில் சைமன் அப்படியே கமிலா போலவே இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் வசிப்பவர் Simon Dorante-Day (56). இவர் சார்லஸ் - கமிலா தம்பதிக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வருகிறார். அதன்படி தனது வளர்ப்பு பாட்டி மரணப்படுக்கையில் இருந்த போது தன்னிடம், நீ சார்லஸ் - கமிலாவிற்கு ரகசியமாக பிறந்த மகன் என கூறியதாக தெரிவிக்கிறார்.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் தன் புகைப்படத்தையும், கமிலா புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதோடு கமிலாவுக்கு முதல் கணவர் ஆண்ட்ரூ மூலம் பிறந்த டாம் பார்க்கர் பவுல்ஸ் புகைப்படத்தையும் சைமன் சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.
அதை பார்த்த பலரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஒருசேர அடைந்தனர். ஏனெனில் சைமன் அப்படியே கமிலா போலவே இளமை தோற்றத்தில் இருப்பதாகவும், டாம் கூட அந்த அளவுக்கு அச்சு அசலாக இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.
சிலர் தெரிவித்த கருத்தில், லவ் யூ, சைமன், தயவு செய்து உங்கள் உரிமைக்காகப் போராடுங்கள், ஒரு நாள் அது அதிகாரப்பூர்வமாகிவிடும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே டி.என்.ஏ பரிசோதனை மூலம் உண்மையை உலகிற்கு கொண்டு வர விரும்புவதாக சைமன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.