இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி குடியிருக்கும் வீட்டின் விலை என்ன தெரியுமா?
எளிமையான வாழ்க்கை நடத்துவதாக கூறும் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி குடியிருப்பது பெங்களூருவில் அமைந்துள்ள கிங்ஃபிஷர் டவரில்.
சொகுசு மாளிகை
மொத்தம் கண்ணாடி சுவர்களுடன் 34 மாடிகள் கொண்ட, ஹெலிகொப்டர் தளம் அமைந்துள்ள. 81 குடும்பங்கள் மட்டுமே குடியிருக்கும் சொகுசு மாளிகையில் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வசித்து வருகிறார்.
பெங்களூருவின் UB சிட்டியில் இந்த சொகுசு மாளிகை அமைந்துள்ளது. பிரெஸ்டீஜ் குழுமம் மற்றும் யுனைடெட் ப்ரூவரீஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்தே 34 மாடிகள் கொண்ட இந்த தொகுப்பு மாளிகையை நிறுவினார்கள்.
2010ல் இந்த திட்டம் அறிவித்த போது சதுர அடிக்கு ரூ.22,000 என விலை குறிப்பிட்டிருந்தனர். இன்று அதன் விலை பல மடங்கு என்றே கூறுகின்றனர். கிங்ஃபிஷர் டவரில் 16வது மாடியில் 8,400 சதுர அடி வீட்டில் குடியிருக்கும் நாராயண மூர்த்தி, சதுர அடிக்கு ரூ 59,500 என சுமார் 50 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sky Mansion
இதே கிங்ஃபிஷர் டவரில் 23வது மாடியை ரூ 28 கோடிக்கு சுதா நாராயண மூர்த்தியும் வாங்கியுள்ளார். Zerodha இணை நிறுவனரான நிகில் காமத் இதே டவரில் 7,000 சதுர அடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
2022ல் Rana George என்பவர் ரூ 35.16 கோடிக்கு 8,321 சதுர அடி குடியிருப்பை வாங்கினார். ஆனால் தற்போதும் Sky Mansion என பெயரிடப்பட்டுள்ள 40,000 சதுர அடி குடியிருப்பை இதுவரை எவரும் வாங்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகை போல் அமைந்துள்ள விஜய் மல்லையாவுக்கு சொந்தமான Sky Mansion குடியிருப்பின் மதிப்பு ரூ 165 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |