ஜேர்மனியில் புற்றுநோய் சிகிச்சை..பிரபல இந்திய தயாரிப்பாளரின் 20 வயது மகள் உயிரிழப்பு
பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் கிஷன் குமாரின் மகள் திஷா குமார் புற்றுநோயால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திரைப்பட தயாரிப்பாளர்
T-Series தலைவர் பூஷன் குமாரின் உறவினர் கிஷன் குமார் இந்தியில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.
இவரது 20 வயது மகள் திஷா குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் நீண்டகாலமாக நோயுடன் போராடி வந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஜேர்மனியில் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திஷா, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் திஷா உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் வெளியான அனிமல் படத்தை கிஷன் குமார் தயாரித்திருந்தார். அவரது 20 வயது மகள் புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |