ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் 2 இளம் வீரர்கள் சேர்ப்பு! தமிழக வீரருக்கு முதல் முறையாக வாய்ப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் 2 இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போடடிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நாளை பிப்ரவரி 6ம் திகதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
தவான் உட்பட 4 இந்திய வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தன்னுடன், இஷான் கிஷான் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என ரோகித் சர்மா அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் மற்றும் ஷாருக் கான் ஆகியோரை தேர்வுக் குழு சேர்த்துள்ளது என பிசிசிஐ அறிவித்துள்ளது.
தமிழக வீரர் ஷாருக் கான் முதல் முறையாக இந்திய ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:
- ரோகித் சர்மா (கேப்டன்)
- விராட் கோலி
- சூர்யகுமார் யாதவ்
- தீபக் ஹூடா
- ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)
- தீபக் சாஹர்
- ஷர்துல் தாக்கூர்
- யுஸ்வேந்திர சாஹல்
- குல்தீப் யாதவ்
- வாஷிங்டன் சுந்தர்
- ரவி பிஷ்னோய்
- முகமது. சிராஜ்
- பிரசித் கிருஷ்ணா
- அவேஷ் கான்
- இஷான் கிஷன்
- ஷாருக் கான்
NEWS - Ishan Kishan and Shahrukh Khan added to squad for 1st ODI.
— BCCI (@BCCI) February 5, 2022
More details here - https://t.co/lJRVufPI3s #INDvWI pic.twitter.com/I5jqVp3BQf