84 வயதிலும் இசையுலகை ஆளும் கே.ஜே. யேசுதாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ், மலையாளம் மட்டுமின்றி ஏகப்பட்ட இந்திய மொழிகளில் தனது காந்தக் குரலை பதிவு செய்துள்ள பாடகர் கே.ஜே. யேசுதாஸின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.
கே.ஜே. யேசுதாஸ்
1940ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி கொச்சினில் பிறந்த கே.ஜே. யேசுதாஸ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.
தமிழ், மலையாளம் மட்டுமின்றி ஏகப்பட்ட இந்திய மொழிகளில் தனது காந்தக் குரலை பதிவு செய்துள்ளார். சிறந்த பின்னணி இசை பாடகர் என இந்திய அரசு 8 முறை இவருக்கு தேசிய விருது வழங்கி கவுரவித்துள்ளது.
சிறந்த பின்னணி பாடகருக்கான விருதினை, கேரள அரசு 25 முறையும், தமிழ்நாடு அரசு 5 முறையும் கே.ஜே. யேசுதாசுக்கு வழங்கி உள்ளது. பத்ம பூஷன், பத்மஸ்ரீ, கலைமாமணி, பத்ம விபூஷன் என அனைத்து அங்கீகாரங்களும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தனது 84வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி வரும் இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
சொத்து மதிப்பு
கே.ஜே. யேசுதாஸ் 1970ம் ஆண்டு பிரபா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட 3 குழந்தைகள் இவருக்கு உள்ளனர்.
மூன்று பேரும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர். விஜய் யேசுதாஸ் பாடகராகவும் நடிகராகவும் வலம் வருகிறார்.
கொச்சினில் சொந்தமாக யேசுதாஸுக்கு வீடு மற்றும் கார்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக 15 கோடி ரூபாய் வரை இவருக்கு சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |