வெளிர் நிறத்தில் இதயம்! பிரேத பரிசோதனை முடிவால் பிரபல பாடகரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்
மறைந்த பாடகர் கே.கேவின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது அவரது மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.
கடந்த மே 31ஆம் திகதி பிரபல பின்னணி பாடகரான கே.கே எனும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருத்து நிலவியது.
இந்த நிலையில் கே.கேவின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் கே.கேவின் இதயத்தில் போதுமான அளவு ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தம் வெளியேற முடியாமல் இருந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
கார்டியோஜெனிக் நுரையீரல் வீக்கம் ஏற்படுவதற்கான காரணம் பொதுவாக இதய செயலிழப்பு ஆகும். எனவே நுரையீரலில் இருந்து பெறும் ரத்தத்தை போதுமான அளவு கே.கேவின் இதயம் வெளியேற்ற முடியாமல் இருந்ததால், இதயத்தில் அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo Credit: Instagram/@kk_live_now
அத்துடன் கே.கேவின் இதயத்தின் நோயியல் நிலையம் ஒரு காரணியாக இருந்தது எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. மேலும், இதயத்தின் உச்சியைச் சுற்றியுள்ள தசைகளும் இதயத்தின் மற்றொரு பகுதியுடன் ஒப்பிடுகையில் வெளிர் நிறமாக இருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடைசியாக கே.கே பங்கேற்ற நிகழ்ச்சி கூட்டம் அதிகரித்ததாலும், ஏ.சி சரியாக வேலை செய்ததாலும் அவர் அசௌகரியமாக உணர்ந்துள்ளார். எனவே பிரேத பரிசோதனை அறிக்கையில், இதயத்தில் ஆக்ஸிஜனேற்றம் பிரச்சனை ஏற்பட்டதால் மாரடைப்பு உண்டாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் கே.கேவின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.
Photo Credit: PTI