IPL 2024: ரசலுக்கு பதிலடியாக சரவெடி ஆட்டம் காட்டிய வீரர்..கடைசி பந்தில் SRH தோல்வி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சால்ட் - ரசல்
ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த IPL 2024யின் 3வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் ஆடிய கொல்கத்தா அணி ஆந்த்ரே ரசலின் அதிரடியில் 208 ஓட்டங்கள் குவித்தது. சால்ட் 54 (40) ஓட்டங்களும், ரசல் 64 (25) ஓட்டங்களும் எடுத்தனர்.
ஐதராபாத் அணி தரப்பில் நடராஜன் 3 விக்கெட்டுகளும், மார்கண்டே 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் 5.3 ஓவரில் 60 ஓட்டங்கள் விளாசினர்.
CHAOS at the Gardens! Nat??? gets ??? to make it 5️⃣0️⃣ IPL wickets ??#PlayWithFire #KKRvSRH pic.twitter.com/jfkTjbmLQo
— SunRisers Hyderabad (@SunRisers) March 23, 2024
ஹர்ஷித் ராணா 8வது ஓவரில் செக் வைத்தார். அவரது ஓவரில் மயங்க் அகர்வால் 32 (21) ஓட்டங்களில் அவுட் ஆக, அபிஷேக் ஷர்மா 32 (19) ஓட்டங்களில் ரசல் பந்துவீச்சில் வெளியேறினார்.
ஹெய்ன்ரிச் கிளாசன் சரவெடி
அதன் பின்னர் வந்த ராகுல் திரிபாதி 20 ஓட்டங்களிலும், மார்க்ரம் 18 (13) ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, ஹெய்ன்ரிச் கிளாசன் சரவெடியாய் வெடித்தார்.
சிக்ஸர்களை மட்டுமே பறக்கவிட்ட அவர் 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவருக்கு துணையாக அப்துல் சமாத் 15, ஷாபாஸ் அகமது அதிரடி ஆட்டம் காட்டினர்.
கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்திலேயே கிளாசன் சிக்ஸர் பறக்கவிட்டார்.
An innings that made us believe. Proud ?#PlayWithFire #KKRvSRH pic.twitter.com/7IJxeLeZzm
— SunRisers Hyderabad (@SunRisers) March 23, 2024
ரசல் ஆட்டநாயகன்
அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுக்க, ஷாபாஸ் அகமது 16 ஓட்டங்களில் அவுட் ஆனார். பின்னர் யான்சென் ஒரு ரன் எடுத்தார். ஐந்தாவது பந்தில் கிளாசன் அவுட் ஆனார். அவர் 29 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 63 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியாக பேட் கம்மின்ஸ் கடைசி பந்தை எதிர்கொண்டபோது, ஹர்ஷித் ராணா டாட் பந்தாக வீச 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது.
அந்த அணியின் தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும், ரசல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை ரசல் பெற்றார்.
Acing every department tonight! ? pic.twitter.com/YtsfV4TZSc
— KolkataKnightRiders (@KKRiders) March 23, 2024
Starting the season with a win at home! ✅ pic.twitter.com/1cgaWWPrvH
— KolkataKnightRiders (@KKRiders) March 23, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |