SRHஐ சம்பவம் செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய KKR! மகிழ்ச்சியில் பேசிய ஷ்ரேயாஸ் ஐயர்
குவாலிஃபையர்1 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
திரிபாதி 55
அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபையர்1 போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், ராகுல் திரிபாதி அதிரடியாக 35 பந்துகளில் 55 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் வந்த கிளாசென் 21 பந்துகளில் 32 ஓட்டங்களும், கம்மின்ஸ் 24 பந்துகளில் 30 ஓட்டங்களும் எடுக்க சன்ரைசர்ஸ் 159 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
ICYMI: Sunil Narine was here ? pic.twitter.com/E0yzyWCqzY
— KolkataKnightRiders (@KKRiders) May 21, 2024
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் குர்பாஸ் 23 (14) ஓட்டங்களும், சுனில் நரைன் 21 (16) ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர் மழை
அடுத்து கைகோர்த்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர் மழை பொழிந்தனர். இருவரின் ருத்ர தாண்டவத்தில் கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 164 ஓட்டங்கள் எடுத்து மிரட்டல் வெற்றி பெற்றது.
வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றது.
வெற்றி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், ''செயல்திறனால் மகிழ்ச்சியடைந்தோம், பொறுப்பு முக்கியம், நாங்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்தோம், ஆட்டத்தினால் அதீத மகிழ்ச்சியில் இருக்கிறோம். புத்துணர்ச்சி எங்களுக்கு முக்கியமானது. ஒவ்வொரு பந்துவீச்சாளரும் இந்த சந்தர்ப்பத்தில் நிலைநிறுத்தப்பட்ட விதம், அவர்கள் வந்து விக்கெட்டுகளை வீழ்த்திய விதம் கட்டாயம் என்று நான் நினைக்கிறேன்.
அனைத்து பந்துவீச்சாளர்களின் அணுகுமுறையும் விக்கெட்டுகளை வீழ்த்துவதும் தான். இது குர்பாஸின் முதல் ஆட்டமாகும், மேலும் அவர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். இறுதிப்போட்டியில் நாங்கள் எங்கள் வட்டத்தில் இருக்க வேண்டும் மற்றும் நாங்கள் எங்களால் சிறந்ததை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
Finals, here we come! ? pic.twitter.com/WgYOLMfz4D
— KolkataKnightRiders (@KKRiders) May 21, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |