விறுவிறுப்பான DC vs KKR போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி
ஐபிஎல்லில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்
நடப்பு ஐபிஎல்-லின் இன்று நடைபெற்ற 51 வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்கள் குவித்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய பதும் நிசங்கா 29 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். அணியை மிகப்பெரிய சரிவில் இருந்து மீட்க போராடிய அசுதோஷ் சர்மா 28 பந்துகளில் 39 ஓட்டங்கள் குவித்தார்.
14 ஓவரில் வெற்றியடைந்த கொல்கத்தா

143 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பின் ஆலன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 100 குவித்து அசத்தினார்.
அவரை தொடர்ந்து கேமரூன் கிரீன் 33 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் கொல்கத்தா அணி 14.2 ஓவர்கள் முடிவிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 147 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |