IPL 2022: முதல் வெற்றியை பதிவுசெய்த கொல்கத்தா! சென்னைக்கு ஏமாற்றம்..
2022 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ஓட்டங்கள் எடுத்தது. எம்.எஸ். தோனி 50 ஓட்டங்களும், உத்தப்பா 28 ஓட்டங்களும், ஜடேஜா 26 ஓட்டங்களும் எடுத்தனர்.
தோனியை கட்டிப்பித்துக்கொண்டு விடமறுத்த கோஹ்லி! வைரலாகும் வீடியோ
தோனி 38 பந்துகளில் அரை சதத்தை பதிவுசெய்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். 2022 ஐபிஎல் தொடரின் முதல் அரைசதத்தையும் முதல் சிக்ஸரையும் தல தோனி தான் அடித்துள்ளார்.
பீஸ்ட் இஸ் பேக்! IPL வரலாற்றில் தோனி புதிய சாதனை
கொல்கத்தா சார்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி, ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, 132 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 16 ஓட்டங்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிதிஷ் ராணா 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அஜிங்கியா ரகானே 44 ஓட்டங்களில் வெளியேறினார்.
தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், சாம் பில்லிங்ஸ் பொறுப்புடன் ஆடினர். சாம் பில்லிங்ஸ் 25 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில், கொல்கத்தா அணி 4 விக்கெட்டுக்கு 133 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை கொல்கத்தா அணி பதிவுசெய்தது.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமிருந்து, அதிலும் ஜடேஜா தலைமையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த நிலையில், முதல் போட்டியிலேயே சென்னை அணி சொதப்பியது. டோனி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தும் அணி தோல்வியுற்றது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது.