இக்கட்டான நிலையில் அணி.. அவுட் ஆனதும் சாப்பிட சென்ற வீரர்! கிண்டலடிக்கும் ரசிகர்கள்
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழந்ததும் ஆந்த்ரே ரஸல் சாப்பிட சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா அணியில் பின்ச், வெங்கடேஷ் ஐயர், இந்திரஜித், நரைன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஓரளவு நிலைத்து நின்று ஆடிய அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயரும் 42 ஓட்டங்களில் வெளியேறினார். அப்போது ஸ்கோர் 83-5 ஆக இருந்தது. அடுத்து அதிரடி ஆட்டக்காரர் ஆந்த்ரே ரஸல் களமிறங்கினார்.
சிக்ஸர்களை பறக்க விட்டு அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் குல்தீப் பந்துவீச்சில் வெளியேறினார். இதனால் கொல்கத்தா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். ஆனால், இதை விட ரஸல் செய்த மற்றோரு செயல் தான் ரசிகர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவுட்டான வேகத்தில் அறைக்கு சென்ற ரஸல் சாப்பிட ஆரம்பித்தார். அவர் தட்டில் சாப்பாடு எடுத்து வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
இக்கட்டான சூழலில் தனது அணி தத்தளித்து கொண்டிருக்கும் போது, தாமதமாக வந்தால் சாப்பாடு காலியாகிவிடும் என்பதால் அவர் இப்படி செய்திருப்பார் போலும் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.