5 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்..மனமுடைந்து சாப்பிடுவதை நிறுத்திய வீரரின் தாய்
ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதால், குஜராத் அணி வீரர் யஷ் தயாளின் தாய் மனமுடைந்து சாப்பிடுவதை நிறுத்தியதாக அவரின் தந்தை கூறியுள்ளார்.
ஐந்து சிக்ஸர்கள்
கடந்த 9ஆம் திகதி நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் குஜராத் வீரர் யஷ் தயாள் கடைசி ஓவரை வீசினார். கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் அந்த ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
@BCCI
இதனால் தயாள் பெரும் அதிர்ச்சியடைந்தார். எனினும் சக அணி வீரர்கள் அவரை தேற்றினர்.
மனமுடைந்த தாய்
இந்த நிலையில் யஷ் தயாளின் தந்தை சந்திரபால் தயாள் அளித்த பேட்டி ஒன்றில், போட்டி முடிந்தபோது யஷின் தாயார் ராதா தயாள் அடக்க முடியாமல் அழுது கொண்டிருந்ததாகவும், அவர் சாப்பிடுவதை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் யஷ் தயாள் தன்னிடம் பேசியது குறித்து அவர் கூறுகையில், 'யஷ் தயாள் என்னிடம் எப்படியோ பந்து நழுவியது என்றும், அவர் யார்க்கர்களை தவறவிட்டதால் இரவில் சரியான பிடிப்பு இல்லை என்றும் கூறினார். அவர் கையின் பின்புறத்தில் இருந்து மெதுவாக முயற்சித்தாலும் அதுவும் நொறுங்கியது' என தெரிவித்துள்ளார்.
@BCCI
கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த விஜய் ஹசாரே டிராபியில் யஷ் தயாள் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதன் பின்னர் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.