IPLலில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர்: KKR அணியில் களமிறங்கும் அதிரடி பேட்ஸ்மேன்
ஐபிஎல்-யின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர் அலெஸ் ஹேல்ஸ்க்கு மாற்றாக அவுஸ்திரியாவை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களில் ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் 26 திகதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் போட்டியில் கடந்த சீசனின் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது.
இந்தநிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 1.5 கோடி என்ற அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் அலெஸ் ஹேல்ஸ் போட்டிக்கு முந்திய பாதுகாப்பு குமிழி சேரவேண்டி இருப்பதை காரணம் காட்டி 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கருத்தில், கடந்த நான்கு மாதங்களாக வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பு குமிழி இருந்தும், அவுஸ்திரியாவில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகினேன்.
அதனால் மீண்டும் நான் நீண்ட காலத்தை பாதுகாப்பு குமிழிகுள் கழிக்க நான் விரும்பவில்லை, அது எனது மனநிலை மற்றும் எனது ஆட்டத்தை பாதிக்கும் என்பதால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுகிறேன் என அறிவித்துள்ளார்.
என்மீது நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன், மேலும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இருவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து வீரர் அலெஸ் ஹேல்ஸ் ஐபிஎல்-லிருந்து விலகியதை தொடர்ந்து, அவருக்கு மாற்றாக அவுஸ்திரியாவை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்ட்டுள்ளார்.
நடந்து முடிந்த ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாமல் விலைபோகாத வீரர்களின் பட்டியலில் இருந்த ஆரோன் பின்ச், அடிப்படை விலையான 1.5 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்ட்டுள்ளார்.