இயான் மோர்கனுக்கு காட்டிய ரகசிய குறியீடு! பெரும் சர்ச்சையில் கொல்கத்தா: வைரலாகும் புகைப்படம்
பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின் போது, கொல்கத்தா அணி இயான் மோர்கனுக்கு ரகசியமாக தகவலை கூறும் விதமாக 54 என்ற குறியீடு காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்று முன் தினம் நடந்த பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இருப்பினும் இப்போட்டியில், கொல்கத்தா அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, கொல்கத்தா அணி நிர்வாகம் ஒரு பலகையை மோர்கனுக்கு தெரியும்படி காட்டியது.
அந்த பலகையில் 54 ஒரு குறுஞ்செய்தி பொறிக்கப்பட்டிருந்தது. அந்தக் குறுஞ்செய்திகள் மூலம் ஏதோ ஒரு விஷயத்தை அவருக்கு கொல்கத்தா அணி நிர்வாகம் கூறியிருக்கிறது.
ஒன்று அந்த குறுஞ்செய்தியில் பந்து வீச்சாளரை மாற்ற வேண்டும் அல்லது பீல்டு அமைப்பை மாற்ற வேண்டும் என்பதே அதனுடைய பொருளாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், இயான் மோர்கன் ஒன்றும், மோசமான கேப்டனோ அல்லது சாதாரண கேப்டனோ கிடையாது.
உலக கோப்பையை அவ்வளவு அற்புதமாக விளையாடி கொடுத்தவர், அவருக்கு எந்த நேரத்தில் எந்த விதமான பந்துவீச்சாளர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும்.
எனவே நீங்கள் நல்லது செய்கிறேன் என்று எண்ணி அவரை விவாத பொருளாக மாற்றி விடாதீர்கள். இது மிகவும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.