கொல்கத்தாவின் பந்துவீச்சில் சுருண்டது ஐதராபாத்! 6 விக்கட் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அபார வெற்றி
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கேன் வில்லியன்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடின.
இப்போட்டியில் டாஸ் வென்ற வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து,ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் சஹா ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கத்திலேயே சஹா டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் 10 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆக, ஐதராபாத் அணி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடினார். அவர் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷகிப் அல் ஹசனால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதனால் முதல் 10 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 51 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். ஐதராபாத் அணி வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகி அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ஓட்டங்கள் எடுத்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 116 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது.
Played Lad ??
— IndianPremierLeague (@IPL) October 3, 2021
A calculative half century from KKR ? opener @ShubmanGill ??? #VIVOIPL #KKRvSRH
Follow the match ? https://t.co/Z5rRXTNps5 pic.twitter.com/Ipko4nS4VH
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் விளையாடிய வெங்கடேஷ் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்துள்ளார்.
அடுத்து விளையாடிய ராகுல் திரிபாதி (7), நிதீஷ் ராணா (25) ஓட்டங்களில் வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து சுப்மன் கில், 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தினேஷ் கார்த்திக் (18), மோர்கன் (2) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
19.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 119 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இதனால், அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
The hunt continues... ??#KKRvSRH #KKR #AmiKKR #IPL2021 pic.twitter.com/wk9OjPZQ4s
— KolkataKnightRiders (@KKRiders) October 3, 2021