SENA நாடுகளில் சதம் விளாசிய முதல் இந்திய தொடக்கஆட்டக்காரர்; கே.எல்.ராகுல் சாதனை
kl rahul become first indian opener in test century sena countries: SENA நாடுகளில் சதம் விளாசிய முதல் இந்திய தொடக்கஆட்டக்காரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.
கே.எல்.ராகுல் சாதனை
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய நியூசிலாந்து அணி, Henry Nicholls மற்றும் Glenn Phillips ன் சதத்தால் 368 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 486 ஓட்டங்கள் குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் 136 ஓட்டங்கள் குவித்து தனது 13வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

இதன் மூலம் அனைத்து SENA நாடுகளிலும் டெஸ்ட் சதம் விளாசிய முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் பதிவு செய்தார்.
அனைத்து SENA நாடுகளிலும் சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட், முகமது அசாருதீன் ஆகியோருக்கு அடுத்த படியாக 5வது வீரராக கே.எல்.ராகுல் இணைந்துள்ளார்.