வார்னரை முந்தி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த கே.எல்.ராகுல்
2025 ஐபிஎல் தொடரின் 30 வது லீக் போட்டி, நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ ஜெய்ன்ட்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது.
டெல்லி வெற்றி
நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பாட்டம் ஆடிய லக்னோ அணி 2 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்தது.
லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 52 ஓட்டங்களும், மிட்சல் மார்ஷ் 45 ஓட்டங்களும் எடுத்தனர்.
தொடர்ந்து 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து, 161 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கே.எல்.ராகுல் சாதனை
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 57 ஓட்டங்களும் எடுத்தார்.
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 5000 ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனையை கே.எல். ராகுல் படைத்துள்ளார்.
முன்னதாக டேவிட் வார்னர், 135 இன்னிங்ஸில் விளையாடி 5000 ஓட்டங்கள் எடுத்திருந்தார். தற்போது கே.எல். ராகுல், 130 இன்னிங்ஸில் 5000 ஓட்டங்கள் எடுத்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
விராட் கோலி(157 இன்னிங்ஸ்), ஏபி டிவில்லியர்ஸ்(161 இன்னிங்ஸ்), ஷிகர் தவான்(168 இன்னிங்ஸ்) ஆகியோர் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |